அவசரகால நிலையில் சீனாவிடமிருந்து இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர்!
சீனாவிடம் இருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை சலுகைக் கடனாக பெறுகின்றது இலங்கை அரசாங்கம்.
உலகளாவிய அளவில் பரவிவரும் கொரோனா தொற்றுநோய் இலங்கையையும் பாதித்துள்ள நிலையில் சீன அரசாங்கதின் ஆதரவுடன் சீன அபிவிருத்தி வங்கி இலங்கைக்கு உதவும் வகையில் இந்த 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் சலுகைக் கடன்களை வழங்க தீர்மானித்துள்ளது.
நாட்டின் அவசரகால நிலைமையை கருத்தில் கொண்டு இந்த சலுகைக் கடன்களை வழங்க சீன அரசாங்கம் தீர்மானித்துள்ள பின்னணியில் அதற்கான பத்திரங்களில் கையெழுத்திடப்பட்டுள்ளது.
அத்துடன் அரைவாசிக்கும் குறைவான சர்வதேச பங்கு சந்தை வட்டி வீதத்தில் நீண்டகால கடன் திட்டமாக இந்த தொகை வழங்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
பொதுத் தேர்தல் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் இலங்கை அரசாங்கம் சீனாவிடம் இருந்து ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக பெற தீர்மானம் எடுத்துள்ளதாக தெரிவித்திருந்த நிலையில் இந்த கடன் தொகை அவசரமாக பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்க விடயமாகும்.