சுய தனிமைப்படுத்தலிற்கு ஆதரவாக தனது பிறந்த நாள் கொண்டாட்டங்களை நிறுத்திய ஏழு வயது சிறுமி – பொறிஸ்ஜோன்சனிற்கு கடிதம்
கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக வீட்டிற்குள் இருப்பதற்காக தனது பிறந்த நாள் கொண்டாட்டங்களை நிறுத்தியுள்ளதாக தெரிவித்து பிரிட்டிஸ் பிரதமர் பொறிஸ் ஜோன்சனிற்கு கடிதம் எழுதியுள்ள ஏழு வயது சிறுமிக்கு பாராட்டுகளை தெரிவித்து பிரதமர் பதில் கடிதம் எழுதியுள்ளார்.
ஜோசப்பைன் என்ற ஏழு வயது சிறுமி பிரிட்டிஸ் பிரதமரிற்கு எழுதியுள்ள கடிதத்தில் பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளதால் தனது பிறந்த நாள் கொண்டாட்டத்தினை நிறுத்திவிட்டு வீட்டில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
ஸ்டபிங்டனில் வசிக்கும் ஏழு வயது சிறுமி கொரோனா வைரசிற்கு எதிரான போராட்டத்திற்கு உதவியாகயிருப்பதற்காக தனது பிறந்தநாளை நிறுத்தியதாக சிறுமி எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று எனது பிறந்தநாள் ஆனால் நீங்கள் கேட்டுக்கொண்டதால் நான் வீட்டில் இருக்கின்றேன் என சிறுமி சிறுமி எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அம்மாவும் அப்பாவும் பிறந்த நாள் கொண்டாட்டங்களை இரத்துச்செய்திருப்பார்கள் என கருதுகின்றேன் ஆனால் நான் அது பற்றி கவலைப்படவில்லை நான் அனைவரும் நன்றாக இருக்கவேண்டும் என பிரிட்டிஸ் பிரதமருக்கு சிறுமி எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எங்களை நன்றாக வைத்திருப்பதற்காக கடுமையாக பாடுபடுங்கள் நீங்கள் உங்கள் கைகளை கழுவுவதற்கு மறக்கவில்லை தானே எனவும் சிறுமி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளால்
பிரிட்டிஸ் பிரதமர் பொறிஸ்ஜோன் சிறுமிக்கு பதில் கடிதத்தை எழுதியுள்ளதுடன் அதனை டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
பிறந்த நாள் வாழ்த்துக்கள், நீங்கள் வீட்டிலிருப்பது குறித்து மகிழ்ச்சியடைகின்றேன், பிறந்தநாள் நிகழ்வு இரத்தானது குறித்து கவலையடைகின்றேன் என பொறிஸ்ஜோன்சன் குறிப்பிட்டுள்ளார்.
நாங்கள் தேசிய சுகாதாரத்தையும் உயிர்களையும் பாதுகாப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்கின்றோம் நீங்களும் இதனை செய்துள்ளீர்கள் சிறந்த முன்மாதிரியாக விளங்குகின்றீர்கள் என பொறிஸ்ஜோன்சன் தெரிவித்துள்ளார்.
மக்களை பாதுகாப்பாக வைத்திருப்பதற்காக நாங்கள் 24 மணிநேரமும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம்,நாங்கள் இணைந்து பணியாற்றினால் வைரசினை அழித்துவிடலாம் அதன் பின்னர் நீங்கள் உங்கள் நண்பர்களுடன் பிறந்தநாளை கொண்டாடலாம் என பொறிஸ்ஜோன்சன் தெரிவித்துள்ளார்.
நான் அடிக்கடி கைகழுவுகின்றேன் எனவும் பொறிஸ்ஜோன்சன் தெரிவித்துள்ளார்.