செய்திகள்
ஜூன் 20 இல் தேர்தல் நடத்துவதை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான பரிசீலனை ஆரம்பம்
பொதுத் தேர்தலை ஜூன் 20 ஆம் திகதி தேர்தல் நடத்துவதை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான 6 ஆம் நாள் பரீசிலனை இன்று ஆரம்பமானது.
பொதுத் தேர்தலை ஜூன் 20 ஆம் திகதி நடாத்த எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தினையும், ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்த தீர்மானத்தையும் வலுவிழக்கச் செய்யக் கோரி உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான பரீசிலனை இன்று (26.05.2020) காலை ஆரம்பமானது.
ஜூலை மாதம் 20 ஆம் திகதி தேர்தலை நடத்துவதாக தெரிவித்து வெளியிடப்பட்டிருந்த வர்த்தமானிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணை பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவர் அடங்கிய நீதிபதி குழாம் முன்னிலையில் ஆரம்பமாகியுள்ளது.