கொவிட் 19 தொற்று மாவட்ட ரீதியில்..
நாட்டில் கொவிட் 19 தொற்றுக்குள்ளானதாக அடையாளம் காணப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 65 ஆக அதிகரித்துள்ளது.
சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
அத்துடன் கொவிட் 19 தொற்றுக்குள்ளானதாக சந்தேகிக்கப்படும் 218 பேர் மருத்துவ கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
அதிகளவான நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்திலே பதிவாகியுள்ளனர்.
அங்கு சுமார் 18 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், கொழும்பு மாவட்டத்தில் 17 பேரும், புத்தளம் மாவட்டத்தில் 12 பேரும், குருநாகல் மற்றும் களுத்துறை மாவட்டங்களில் தலா 4 பேர் வீதம் கொவிட் – 19 தொற்றுக்கு உள்ளானதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதுதவிர இரத்தினபுரி மாவட்டத்தில் 3 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
காலி, கேகாலை, மட்டக்களப்பு, மாத்தறை, பதுளை ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு நோயாளர் வீதம் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, 16 தனிமைப்படுத்தல் மையங்களில் சுமார் 2 ஆயிரத்து 463 பேர் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கொலிட் 19 பரவுவதை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
ரண்தம்பே பகுதியில் புதிதாக ஒரு தனிமைப்படுத்தல் மையம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், தற்போது 25 மருத்துவமனைகளில் கொவிட் 19 தொற்றுக்கு உள்ளானவர்களை அடையாளம் காணபதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.