பங்குனி மாத ராசிபலன்கள்!… அதிர்ஷ்டம் தேடி வரப்போவது எந்த ராசிக்கு தெரியுமா?
இந்த பங்குனி மாதம் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்க போகுது என்பதை பற்றி பார்ப்போம்.
மேஷம்
சிந்தனையை விட செயலுக்கு முக்கியத்துவம் தரும் மேஷ ராசி அன்பர்களே, உங்கள் ராசி நாதன் செவ்வாய் பகவான் உங்கள் ராசிக்கு 9ல் மாத முற்பகுதியில் சஞ்சரிப்பதால் மனதில் ஒரு தெளிவு பிறக்கும்.
இதுவரை இருந்த தடைகள், குழப்பங்கள் நீங்கி உற்சாகம் பெறுவீர்கள், மாத மத்தியில் செவ்வாய் பகவான் பத்தில் உச்சம் பெற்று சஞ்சரிப்பதால் சிறு, சிறு உடல் பாதிப்பு இருந்தாலும் முன்னேற்றங்கள் உண்டு. உங்கள் திறமை வெளிப்படும் காலமாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்.
பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உங்கள் பேச்சுக்கு மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். கணவன் மனைவிக்குள் அன்பும், ஆதரவும் அதிகரிக்கும். மனைவி வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
வியாபாரத்தில் கூட்டாளிகளாலும், புதிய ஒப்பந்தங்களாலும் ஆதாயம் உண்டு. சகோதர, சகோதரிகளால் ஆதாயம் உண்டு.
விடாமுயற்சியால் வெற்றி பெறுவீர்கள். வெளியூர் பயணங்களால் நன்மை உண்டாகும். மனதில் உற்சாகமும், தன்னம்பிக்கையும் அதிகரித்து வெற்றி நடை போடுவீர்கள். தாய் மற்றும் உறவுகளால் சிறு பிரச்னைகள் வந்து நீங்கும். வீடு, வாகனங்களால் செலவுகள் அதிகரிக்கும்.
பிள்ளைகளால் மகிழ்ச்சி பொங்கும். புதிய சிந்தனைகள் உருவாகும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். பூர்வீக சொத்து விஷயங்கள் சாதகமாக முடியும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர்வு ஏற்படும். தனது திறமை வெளிப்படும்.
உயரதிகாரிகளால் பாராட்டப்படும் சூழல் உருவாகும். தந்தையின் உடல்நிலையில் சிறு பாதிப்பு வந்தாலும், உறவில் இணக்கம் அதிகரிக்கும். தொழிலில் உங்கள் கை ஓங்கும். உங்கள் புகழ், அந்தஸ்து உயரும்.
நண்பர்கள் உதவிக்கரமாக இருப்பார்கள். உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றியடையும். ஆன்மிக பயணங்கள் <மேற்கொள்வீர்கள்.
அதிர்ஷ்டமான நாட்கள்: மார்ச் 18, 19, 20, 21, 22, 23. ஏப்ரல் 6, 7, 8.
சந்திராஷ்டம நாட்கள்: மார்ச் 14, 15, 16. ஏப்ரல் 10, 11, 12
ரிஷபம்
தனது பொறுமையால் பெருமை சேர்க்கும் ரிஷப ராசி அன்பர்களே, உங்கள் ராசி நாதன் சுக்கிர பகவான் உங்கள் ராசிக்கு 12 ல் சஞ்சரிப்பதால் எதிலும் விழிப்புணர்வு தேவை.
தேவையற்ற செலவீனங்கள் வர வாய்ப்புள்ளதால் வீண் செலவுகள் மற்றும் ஆடம்பர செலவுகளை தவிர்ப்பது நல்லது. யாரையும் முழுமையாக நம்பி செயலில் இறங்க வேண்டாம். விழிப்புணர்வுடன் செயல்படுங்கள்.
எதிர்பாராத அதிர்ஷ்டம் உண்டாகும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு மரியாதை அதிகரிக்கும். சகோதர, சகோதரிகளால் ஆதாயம் உண்டு. வெளியூர் பயணங்களால் நன்மை உண்டாகும்.
தாயின் அன்பும், ஆதரவும் அதிகரிக்கும். வீடு, வாகனம் வாங்குவதற்கான சூழல் உருவாகும். மாணவர்களுக்கு கல்வியில் மேன்மை உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் உண்டு. செயல்களில் உங்கள் அறிவுத்திறன் வெளிப்படும். புதிய சிந்தனைகள் தோன்றும்.
பிள்ளைகளால் பெருமைபடக்கூடிய சூழல் உண்டாகும். வழக்கு விஷயங்கள் சாதகமாக முடியும். அரசால் அனுகூலம் உண்டு. தம்பதியருக்குள் அன்பும் ஆதரவும் அதிகரிக்கும். திருமணப் பேச்சு வார்த்தைகள் சாதகமாக முடியும். வியாபாரத்தில் கூட்டாளிகளால் ஆதாயம் உண்டு.
புதிய ஒப்பந்தங்களால் லாபம் அதிகரிக்கும். உங்கள் வாழ்வில் சிறு, சிறு பிரச்னைகள், தடைகள் ஏற்பட்டாலும் அனைத்தையும் சமாளித்து வெற்றி பெறுவீர்கள்.
தந்தை வழியில் சிறு, சிறு பிரச்னைகள் வந்தாலும், இறுதியில் நன்மையே விளையும். படிப்பு மற்றும் வேலை வாய்ப்புக்காக வெளிநாடு செல்வதற்கான முயற்சிகள் கைகூடும். தொழில் மற்றும் உத்தியோகத்தில் உயர்வு ஏற்படும்.
நீண்ட நாளாக தடை பட்ட பதவி உயர்வு, ஊதிய உயர்வு தேடி வரும். உங்கள் தனித்திறமையை வெளிப்படுத்துவதற்கான சூழல் உருவாகும். மற்றவர்களால் பாராட்டப்படுவீர்கள். புதிய தொழில் முயற்சிகள் கைகூடும்.
அதிர்ஷ்டமான நாட்கள்: மார்ச் 21, 22, 23, 24, 25. ஏப்ரல் 08, 09, 10.
சந்திராஷ்டம நாட்கள்: மார்ச் 16, 17, 18. ஏப்ரல் 13, 14
மிதுனம்
வாழ்வின் ஏற்ற, இறக்கங்களை அனுபவமாக எடுத்துச் செயலாற்றும் மிதுன ராசி அன்பர்களே, உங்கள் ராசி நாதன் புதன் பகவான் உங்கள் ராசிக்கு 9ல் சஞ்சரிப்பதால் உங்களுக்கு தெய்வ அனுகூலம் உண்டாகும். சிறு, சிறு பிரச்னைகளை சந்தித்தாலும், அதனை சமாளிக்கும் திறமை ஏற்படும்.
எதிர்பாராத மாற்றங்களும், முன்னேற்றங்களும் ஏற்படும். எந்த காரியத்திலும் நன்மை, தீமைகளை நன்கு ஆராய்ந்து, சிந்தித்து செயல்படுவது நல்லது. குடும்பத்தில் வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. பொருளாதார நிலையில் ஏற்றத் தாழ்வு இருந்தாலும், எதிர்பார்த்த பணவரவு உண்டு.
பேச்சில் கவனம் தேவை. சகோதர, சகோதரிகளால் ஆதாயம் உண்டு. உங்கள் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வெளியூர்ப் பயணங்களால் ஆதாயம் உண்டு. தாய் மற்றும் உறவினர்கள் உங்கள் செயல்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள்.
வீடு, நிலம், வாகனம் வாங்குவதற்கான முயற்சிகள் கைகூடும். மாணவர்கள் கல்வியில் மேன்மை பெறுவார்கள். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். பூர்வீக சொத்து விஷயங்கள் சாதகமாக முடியும். நீண்டநாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். தெய்வ அனுகூலம் உண்டு.
எதிர்பாராத அதிர்ஷ்டம் உண்டாகும். தம்பதியருக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளாலும், புதிய ஒப்பந்தங்களாலும் ஆதாயம் உண்டு. எந்த விஷயத்திலும் பொறுமையுடனும், விழிப்புணர்வுடனும் செயல்படுவது நல்லது.
வாகனப் பயணங்களில் கவனம் தேவை. இரவு நேரப் பயணங்கள் மற்றும் நீண்ட தூர பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. வீண் பிரச்னைகளிலும், மற்றவர் விஷயங்களிலும் அநாவசியமாக தலையிட வேண்டாம். தொழில் மற்றும் அலுவலக விஷயங்களில் அதிக கவனம் தேவை.
சக ஊழியர்கள் மற்றும் உயரதிகாரிகளிடம் கவனமுடன் செயல்படுங்கள். தந்தையால் அனுகூலம் உண்டு. ஆன்மிக பயணங்கள் சென்று வருவீர்கள். நண்பர்களிடம் அளவுடன் பழகுவது நல்லது.
அதிர்ஷ்டமான நாட்கள்: மார்ச்14, 15, 16, 23, 24, 25, 26, 27, 28. ஏப்ரல் 10, 11, 12.
சந்திராஷ்டம நாட்கள்: மார்ச் 18, 19, 20.
கடகம்
வாழ்வில் எத்தனை தடை வந்தாலும் கடந்து முன்னேற்றப் பாதையில் செல்லும் கடக ராசி அன்பர்களே, உங்கள் ராசி நாதன் சந்திர பகவான் உங்கள் ராசிக்கு 5 ல் சஞ்சரிப்பது பூர்வ புண்ணிய பலன்களை அனுபவிக்கும் காலமாகும்.
தெய்வ அனுகூலம் உண்டாகும். எத்தனை பிரச்னைகள் வந்தாலும், அதை எளிதாக கடக்கும் காலம். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. பொருளாதார நிலையில் ஏற்றத் தாழ்வுகள் உண்டாகும்.
சகோதர,சகோதரிகளால் மனக் கசப்பு வந்து நீங்கும். மாத முற்பகுதியில் எடுக்கும் முயற்சிகளில் சிறிய தடைகள் வந்து நீங்கும்.தாய் மற்றும் உறவினர்களால் ஆதாயம் உண்டு. வீடு, வாகனம், நில புலன் விஷயங்கள் சாதகமாக இருக்கும்.
மாணவர்களுக்கு கல்வியில் மேன்மை உண்டாகும். குழந்தைகள் உடல் நிலையில் கவனம் தேவை. குழந்தைகளால் சிறு, சிறு பிரச்னை வர வாய்ப்புள்ளதால் குழந்தைகளை கண்காணிப்பில் வைத்து அன்புடன் அரவணைத்துச் செல்வது நல்லது. எதிரிகளிடம் கவனம் தேவை.
தேவையற்ற வீண் பிரச்னைகளை தவிர்ப்பது நல்லது. குடும்பத் தேவைக்காக கடன் வாங்கும் சூழல் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துங்கள்.
உடலில் ஏதேனும் பிரச்னை என்றால் காலம் தாழ்த்தாமல் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. கணவன் மனைவிக்குள் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது.
குடும்ப விஷயங்களில் அந்நியரின் தலையீட்டை தவிர்க்கவும். வியாபாரத்தில் கூட்டாளிகள் மற்றும் ஒப்பந்த விஷயங்களில் அதிக கவனமுடன் செயல்படுவது நல்லது. எதிர்பாராத அதிர்ஷ்டமும், தனவரவும் உண்டாகும்.
தொழில் மற்றும் உத்தியோகத்தில் சிறு, சிறு பிரச்னை வந்தாலும் அனைத்தையும் சமாளிக்கும் திறமை இருக்கும். நண்பர்களால் ஆதாயம் உண்டு. பிரபலங்களின் நட்பு கிடைக்கும்.
அதிர்ஷ்டமான நாட்கள்: மார்ச்16, 17, 18, 26, 27, 28, 29, 30, 31. ஏப்ரல் 13, 14.
சந்திராஷ்டம நாட்கள்: மார்ச் 21,22,23
சிம்மம்
கம்பீரமும், அதிகார தோரணையும் இயற்கையிலே அமைந்த சிம்ம ராசி அன்பர்களே, உங்கள் ராசி நாதன் சூரிய பகவான் உங்கள் ராசிக்கு 8 ல் சஞ்சரிப்பதால் எதிலும் கவனம் தேவை.
எடுக்கும் முயற்சிகளில் சிறு, சிறு தடை பிரச்னைகள் வந்தாலும், விடா முயற்சியுடன் செயல்படுங்கள். உங்கள் பேச்சால் மற்றவர்களைக் கவருவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.
பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் நிலவும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். உடன் பிறப்புக்கள் உதவிகரமாக இருப்பார்கள். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு.
விடாமுயற்சியே வெற்றி தரும் என்பதை உணரும் காலம். புதிய தங்க நகை ஆபரண சேர்க்கைகள் உண்டாகும். வீடு, வாகன பழுதுகளை சரி செய்வீர்கள். தாய் மற்றும் உறவினர்களால் சிறு சிறு மனஸ்தாபங்கள் வந்து நீங்கும்.
வாகனம் தொடர்பான ஆவணங்களை சரியாக வைத்து கொள்ளுங்கள். குழந்தைகளால் சிறு, சிறு பிரச்னை வந்தாலும் கவலை கொள்ளத் தேவையில்லை.
பூர்வீக சொத்து விஷயங்கள் சாதகமாக முடியும். நீண்டநாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். எதிரிகள் விலகிச் செல்வார்கள். வழக்கு விஷயங்கள் சாதகமாக முடியும். அரசால் அனுகூலம் உண்டு.
பிரபலங்களின் அறிமுகமும், நட்பும் கிடைக்கும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்கான சூழல் உருவாகும். தம்பதியருக்குள் அன்பும், ஆதரவும் அதிகரிக்கும். மனைவி வழியில் பக்க பலமாக இருப்பார்கள். வியாபாரத்தில் கூட்டாளிகளால் ஆதாயம் உண்டு.
புதிய ஒப்பந்தங்கள் நன்மை தரும். எதிர்பாராத அதிர்ஷ்டமும், தனவரவும் உண்டாகும். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பிதுர் வழி சொத்து விஷயங்கள் சாதகமாக முடியும். தெய்வ அனுகூலம் உண்டு. தொழில் மற்றும் உத்தியோகத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். நண்பர்களால் ஆதாயம் உண்டு.
அதிர்ஷ்டமான நாட்கள்: மார்ச் 18, 19, 20, 29, 30, 31 ஏப்ரல்01, 02.
சந்திராஷ்டம நாட்கள்: மார்ச் 23, 24, 25.
கன்னி
எந்த சூழ்நிலையிலும் இன்முகம் மாறாமல் பழகும் கன்னி ராசி அன்பர்களே, உங்கள் ராசி நாதன் புதன் உங்கள் ராசிக்கு 6ல் சஞ்சரிப்பதால் மாத முற்பகுதியில் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
எதிரிகளால் பிரச்னை வர வாய்ப்புள்ளதால் எதிலும் விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது. வீண் பிரச்னைகளில் தலையிட வேண்டாம். மாத பிற்பகுதியில் அனைத்தும் சுமுகமாக முடியும். பேச்சில் கவனம் தேவை. எதிர்பாராத தன வரவு உண்டு.
குடும்பத்தில் சிறு, சிறு பிரச்னைகள் வந்தாலும் மாத பிற்பகுதியில் அனைத்தும் சுமுகமாக முடியும். சகோதர, சகோதரிகளால் ஆதாயம் உண்டு. விடாமுயற்சியால் வெற்றி பெறுவீர்கள். மனதில் தைரியமும், தன்னம்பிக்கையும் கூடும். புதிய நகை ஆபரணங்கள் சேர்க்கை உண்டாகும்.
வீடு, வாகன, நில புலன் விஷயங்களில் கவனம் தேவை. தாய் மற்றும் உறவுகளுடன் சிறு மன கசப்புகள் வந்து நீங்கும்.
வாகனத்திற்குரிய ஆவணங்களை சரியாக வைத்துக் கொள்வது நல்லது. குழந்தைகள் உடல் நிலை பாதிப்பு வந்தாலும் கவலை தேவையில்லை. குழந்தைகளை கண்காணிப்பில் வைத்து வழிநடத்தி செல்வது நல்லது.
குல தெய்வ அனுகூலம் உண்டு. கணவன் மனைவிக்குள் சிறு கருத்துவேறுபாடுகள் வர வாய்ப்புள்ளதால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. வியாபாரத்தில் கூட்டாளிகளிடம் கவனம் தேவை. மனைவி வழியில் வீண் விரயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் சிக்கனம் தேவை. மாத முற்பகுதியில் தந்தையின் உடல் நலனில் கவனம் வைப்பது நல்லது.உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.
உங்கள் விடாமுயற்சியும், அயராது உழைப்பும் மற்றவர்களால் பாராட்டப்படும். உங்கள் நீண்ட நாள் முயற்சிகள் நிறைவேறும். நண்பர்களால் ஆதாயம் உண்டு. மூத்த சகோதரர்கள் உதவிக்கரமாக இருப்பார்கள்.
அதிர்ஷ்டமான நாட்கள்: மார்ச் 21, 22, 23, 31. ஏப்ரல் 1, 2, 3, 4.
சந்திராஷ்டம நாட்கள்: மார்ச் 26, 27, 28.
துலாம்
மற்றவர்களை மகிழ்வித்து தானும் மகிழ்வதில் அதிக ஈடுபாடுடைய துலாம் ராசி அன்பர்களே, உங்கள் ராசி நாதன் சுக்கிர பகவான் உங்கள் ராசிக்கு 7ல் இருந்து சம சப்தமாக உங்கள் ராசியைப் பார்ப்பதால் உங்கள் தனித்திறன் வெளிப்படும். உங்கள் ஆளுமை அதிகரிக்கும். மனைவி வழியில் பக்கபலமாக இருப்பார்கள்.
குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். பொருளாதார நிலையில் உயர்வு ஏற்படும். உடன் பிறப்புகளால் சிறு மனஸ்தாபங்கள் உருவாகும். மனதில் தைரியத்தையும், தன்னம்பிக்கையும் வளர்த்துக் கொள்வது நல்லது. எதிர்காலத்தைப் பற்றி பயம், வீண் கவலையை தவிர்ப்பது நல்லது. புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான முயற்சிகள் கைகூடும்.
தாயின் உடல் நலனில் கவனம் தேவை. தாய் மற்றும் உறவினர்களுடன் சிறு கருத்து வேறுபாடு வந்தாலும், பிற்பகுதியில் நன்மையே விளையும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டானாலும், அவர்களின் தேவைக்காக செலவினங்கள் அதிகரிக்கும்.
உடல் ஆரோக்கியம் மேம்படும். எதிரிகள் விலகி செல்வார்கள். வழக்கு விஷயங்கள் சாதகமாக முடியும். நண்பர்களால் பிரச்னை வர வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. கணவன் மனைவிக்குள் அன்பும், ஆதரவும் அதிகரிக்கும்.
உங்கள் வாழ்க்கைத்துணை உங்கள் முன்னேற்றத்துக்கு உறுதுணையாக இருப்பார். வியாபாரத்தில் கூட்டாளிகளாலும், புதிய ஒப்பந்தங்களாலும் ஆதாயம் உண்டு.
திடீர் தனவரவு மற்றும் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் உண்டாகும். தந்தையின் உடல் நிலையில் கவனம் தேவை. தந்தையுடன் சிறு கருத்து வேறுபாடுகள் பிரச்னைகள் வந்து நீங்கும். வெளியூர் மற்றும் வெளிநாடு செல்வதற்கான முயற்சிகள் கைகூடும்.
தொழில் மற்றும் உத்தியோகத்தில் உயர்வு ஏற்படும். சிறு தடைகள், பிரச்னைகள் இருந்தாலும் அனைத்தையும் கடந்து வெற்றி பெறுவீர்கள். பணவரவு திருப்தியளிக்கும். உங்கள் திறமை உயரதிகாரிகளால் அங்கீகரிக்கப்படும். புதிய முயற்சிகள் கைகூடும்.
அதிர்ஷ்டமான நாட்கள்: மார்ச் 23, 24, 25. ஏப்ரல் 2, 3, 4, 5, 6.
சந்திராஷ்டம நாட்கள்: மார்ச் 29, 30, 31
விருச்சிகம்
எண்ணிய எண்ணத்தை செயலாக மாற்றுவதில் வேகமுடைய விருச்சிக ராசி அன்பர்களே, உங்கள் ராசி நாதன் செவ்வாய் பகவான் உங்கள் ராசிக்கு 2ல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்.
பொருளாதார நிலையில் நல்ல மேம்பாடு அதிகரிக்கும். உங்களுடைய செயல்களால் மற்றவர்களை எளிதில் வசீகரிப்பீர்கள். உங்கள் ஆளுமை திறன் வெளிப்படும். மனதில் தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். எதிலும் உற்சாகமாக ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள்.
சகோதர, சகோதரிகளால் நன்மை உண்டு. வெளியூர்ப் பயணங்களால் ஆதாயம் உண்டு. உங்கள் முயற்சிக்கேற்ற பலனை அனுபவிப்பீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். தாய் மற்றும் உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.
குழந்தைகள் உடல் நிலையில் கவனம் தேவை. மாதமுற் பகுதியில் குழந்தைகளால் சிறு, சிறு பிரச்னை வந்தாலும், பிற்பகுதியில் அனைத்தும் சுமுகமாக முடியும்.
பூர்வீக சொத்து விஷயங்களில் சிறு, சிறு பிரச்னை இருந்தாலும் பிறகு அனைத்தும் சாதகமாக முடியும். நீண்டநாள் பிரார்த்தனை நிறைவேறும். தம்பதியருக்குள் சிறு, சிறு பிரச்னைகளும், கருத்து வேறுபாடுகளும் வந்து நீங்கும்.
மாத பிற்பகுதியில் சரியாகும். வியாபாரத்தில் கூட்டாளிகளிடம் கவனம் தேவை. மாணவர்கள் கல்வியில் சாதனை படைக்கும் காலம். எதிர்பாராத அதிர்ஷ்டம் உண்டாகும். தந்தையால் அனுகூலம் உண்டு. பிதுர்வழி சொத்து விஷயங்கள் சாதகமாக முடியும். வெளியூர்ப் பயணங்களால் ஆதாயம் உண்டு. தொழில் மற்றும் உத்தியோகத்தில் உயர்வு ஏற்படும்.
உயரதிகாரிகள் மற்றும் சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். புதிய பொறுப்புக்கள் தேடி வரும். நண்பர்கள் மற்றும் மூத்த சகோதரர்கள் உறுதுணையாக இருப்பார்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். சுப விரயங்கள் அதிகரிக்கும். சிக்கனம் தேவை.
அதிர்ஷ்டமான நாட்கள்: மார்ச் 26, 27, 28. ஏப்ரல் 4, 5, 6, 7, 8.
சந்திராஷ்டம நாட்கள்: மார்ச் 31, ஏப்ரல் 1, 2.
தனுசு
எல்லோருக்கும் நல்லவனாகத் திகழும், எந்நிலையிலும் தன்னிலை மாறாமல் இருக்கும் தனுசு ராசி அன்பர்களே, உங்கள் ராசி நாதன் குருபகவான் உங்கள் ராசியிலே சஞ்சரிப்பதால் எதிலும் திறமையுடன் செயல்படுவீர்கள்.
நன்மை, தீமைகளை பகுத்தறிந்து உணர்வீர்கள். உங்களை சுய பரிசோதனை செய்து கொள்ளும் காலமாகும். தேவையற்ற குழப்பத்தையும், எதிர்காலம் பற்றிய பயத்தையும் தவிர்ப்பது நல்லது.
தேவையற்ற செலவுகள் அதிகரிக்கும் என்பதால் சிக்கனமாக இருப்பது நல்லது. பேச்சில் கவனம் தேவை. வீண் பேச்சுக்களையும், வாக்கு வாதங்களையும் தவிர்த்து செயலில் கண்ணும் கருத்துமாக இருங்கள்.
பொருளாதார நிலையில் ஏற்ற தாழ்வுகள் உண்டாகும். குடும்ப விஷயங்களில் அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. எந்த விஷயத்திலும் பொறுமையாக சிந்தித்து செயல்படுங்கள்.
சகோதர, சகோதரிகளால் நன்மை உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் சிறு தடைகள் வந்தாலும், விடாமுயற்சியால் வெற்றி பெறலாம்.
அண்டை, அயலாரால் ஆதாயம் உண்டு. தாயின் உடல் ஆரோக்கியம் மேம்படும். தாய் மற்றும் உறவினர்களால் ஆதாயம் உண்டு. வீடு, வாகனம் தொடர்பான விஷயங்களில் நன்மை உண்டாகும். மாணவர்கள் கல்வியில் மேன்மையடைவார்கள்.
பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். குல தெய்வ அனுகூலம் உண்டு. உத்தியோகத்தில் பணிச்சுமை குறையும். உடல் ஆரோக்கியம் மேம்படும். எதிரிகளால் சிறு, சிறு பிரச்னை வந்தாலும், அதனை சமாளித்து விடுவீர்கள். கணவன் மனைவிக்குள் அன்பும், ஆதரவும் அதிகரிக்கும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் சென்று மகிழ்வீர்கள்.
எதிர்பாராத அதிர்ஷ்டமும், தன வரவும் உண்டு. தந்தை வழியில் அனுகூலம். பிதுர்வழி சொத்து விஷயங்கள் சாதகமாக முடியும். மூத்தோர்களின் உதவி கிடைக்கும். தொழில் மற்றும் உத்தியோகத்தில் உயர்வு ஏற்படும். இடமாற்றத்திற்கான முயற்சிகள் கைகூடும். நண்பர்களால் ஆதாயம் உண்டு.
அதிர்ஷ்டமான நாட்கள்: மார்ச் 29, 30, 31. ஏப்ரல் 06, 07, 08, 09, 10.
சந்திராஷ்டம நாட்கள்: ஏப்ரல் 02, 03, 04.
மகரம்
கடின உழைப்பிற்கும், விடா முயற்சிக்கும் உதாரணமாக விளங்கும் மகர ராசி அன்பர்களே, உங்கள் ராசி நாதன் சனிபகவான் உங்கள் ராசியிலே சஞ்சரிப்பது நன்மை எனினும் ஜென்மச்சனியாகவும் சஞ்சரிப்பதால் வீண் சோம்பல், குழப்பம் தவிர்த்து விழிப்புணர்வுடன் செயல்படுவது நல்லது.
விடாமுயற்சியும், கடின உழைப்புமே வெற்றி தரும் என்பதை உணர்ந்து செயல்பட்டால் தடைகளைத் தாண்டி முன்னேறுவீர்கள். பொருளாதார நிலையில் உயர்வு ஏற்படும். குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும்.
எதிர் பாலினத்தவரால் நன்மை உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் கவனம் தேவை. சகோதர, சகோதரிகளால் வீண் விரயம் உண்டாகும். தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் வளர்த்துக் கொள்வது நல்லது. எந்த காரியத்திலும் அவசரம் வேண்டாம்.
வீடு, வாகனம் பழுதை சீர் செய்வீர்கள். புதிய சொத்து வாங்குவதற்கான முயற்சிகள் கை கூடும். தாயின் உடல் நலனில் கவனம் தேவை. தாய் மற்றும் உறவுகளுடன் மனஸ்தாபங்கள் வந்து நீங்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். பூர்வீக சொத்து விஷயங்கள் சாதகமாக முடியும். காதல் முயற்சிகள் கைகூடும்.
தெய்வ அனுகூலம் உண்டாகும். எதிரிகள் விலகிச் செல்வார்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். கணவன் மனைவிக்குள் அன்பும், ஆதரவும் அதிகரிக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளால் ஆதாயம் உண்டு. நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். தந்தை வழியில் அனுகூலம் உண்டாகும்.
பிதுர்வழி சொத்து விஷயங்கள் சாதகமாக முடியும். தொழில் மற்றும் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயர்வு ஏற்படும் காலம் ஆகும். உத்தியோகத்தில் உங்கள் திறமை வெளிப்படும், உயரதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களால் மதிக்கப்படுவீர்கள்.
தொழிலில் புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. தேவையற்ற வீண் விரயங்களை தவிர்க்க சிக்கனம் தேவை. யோகா, தியானம் பயில்வது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
அதிர்ஷ்டமான நாட்கள்: மார்ச்14, 15, 16, 31. ஏப்ரல் 1, 2, 8, 9, 10, 11, 12
சந்திராஷ்டம நாட்கள்: ஏப்ரல் 4, 5, 6.
கும்பம்
உழைப்பே உயர்வு தரும் என்பதில் முழு நம்பிக்கையுடைய கும்ப ராசி அன்பர்களே, உங்கள் ராசி நாதன் சனி பகவான் உங்கள் ராசிக்கு 12 ல் தற்போது சஞ்சரிப்பது ஏழரைச் சனியின் விரயச்சனி காலம் என்றாலும், சனிபகவான் உங்கள் ராசி நாதன் என்பதால், மற்ற ராசிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவது போல் தன் ராசிக்கு ஏற்படுத்த மாட்டார். இருப்பினும், பணம் கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் இனி கவனம் தேவை.
யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம். மற்றவர்களுக்காக ஜாமீன் போன்ற விஷயங்களில் தலையிட வேண்டாம். இந்த மாதம் சுக்கிரன் 2ல் உச்சம் பெறுவதால் பேச்சால் அனைவரையும் வசீகரிப்பீர்கள். பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
அஷ்டலட்சுமி கடாஷம் உண்டாகும். சகோதர, சகோதரிகளால் ஆதாயம் உண்டு. புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான முயற்சிகள் கைகூடும். குழந்தைகள் உடல் நிலையில் கவனம் தேவை. பிள்ளைகள் உங்கள் வார்த்தைக்கு அதிக மதிப்பு கொடுப்பார்கள்.
பங்கு சந்தை விஷயங்களில் அதிக கவனம் தேவை. எதிர்பாராத அதிர்ஷ்டம் உண்டாகும். கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வர வாய்ப்புள்ளதால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. வியாபாரத்தில் கூட்டாளிகளிடம் அதிக கவனம் தேவை. உங்கள் செயல்பாடுகளில் சிறு, சிறு தடைகள் ஏற்பட்டாலும், இந்த மாதம் அவையனைத்தையும் சமாளித்து வெற்றி பெறக்கூடிய சூழல் உருவாகும். தந்தையால் அனுகூலம் உண்டு. தொழில் மற்றும் உத்தியோகத்தில் உயர்வு ஏற்படும். உங்கள் திறமை வெளிப்படும்.
நீண்டநாள் ஆசைகள் நிறைவேறும். அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பதை உணர்ந்து செயல்பட்டால் அனைத்து நன்மைகளும் கிடைக்கும்.
அதிர்ஷ்டமான நாட்கள்: பிப்ரவரி 15, 16, 17, 18, 19, 20. மார்ச் 06, 07, 08.
சந்திராஷ்டம நாட்கள்: பிப்ரவரி 13, மார்ச் 10,11,12.
மீனம்
என்றும் தானும் மகிழ்ந்து மற்றவர்களையும் மகிழ்வித்து உற்சாகமாக செயல்படும் மீன ராசி அன்பர்களே, உங்கள் ராசி நாதன் குருபகவான் உங்கள் ராசிக்கு பத்தில் சஞ்சரிப்பதும், உடன் செவ்வாய், கேது இருவரும் சஞ்சரிப்பது தர்ம கர்மாதிபதி யோகத்தால் உங்கள் தொழில் மற்றும் உத்தியோகத்தில் உயர்வைத் தரும். சிறு, சிறு பிரச்னைகள் இருந்தாலும் உங்கள் அந்தஸ்து உயரும்.
பேச்சில் கவனம் தேவை. வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்ப விஷயங்களில் பொறுமையை கடைபிடியுங்கள்.
பொருளாதார நிலையில் ஏற்ற தாழ்வு வந்து நீங்கும். சகோதர, சகோதரிகளால் ஆதாயம் உண்டு. அண்டை அயலார் உதவிகரமாக இருப்பார்கள். உங்கள் முயற்சிகளில் மாத பிற்பகுதியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
தாய் மற்றும் உறவினர்களால் சிறு விரயங்கள் ஏற்படும். வீடு, வாகன செலவுகள் அதிகரிக்கும்.
மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். புதிய திட்டங்களை செயல்படுத்துவீர்கள். பூர்வீக சொத்து விஷயங்களில் பிரச்னைகள் வந்து நீங்கும்.
உடல் நலத்தில் கவனம் தேவை. சிறு உடல் பாதிப்புகள் வந்தாலும் உடனடியாக மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது.
கணவன் மனைவிக்குள் கருத்துவேறுபாடுகள் வரவாய்ப்புள்ளதால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. வியாபாரத்தில் கூட்டாளிகளிடம் கவனம் தேவை. எதிர்பாராத தன வரவு உண்டு. தந்தை வழியில் ஆதாயம் உண்டு.
பிதுர் வழி சொத்து விஷயங்கள் சாதகமாக முடியும். வெளிநாடு செல்வதற்கான முயற்சிகள் கைகூடும். தொழில் மற்றும் உத்தியோகத்தில் எத்தனை பிரச்னை இருந்தாலும் அனைத்தையும் சமாளித்து வெற்றி பெறுவீர்கள்.
உங்கள் திறமை வெளிப்படும். உயரதிகாரிகள் மற்றும் சக ஊழியர்கள் உங்களுக்கு சாதகமாக இருப்பார்கள். பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும். ஆசைகள் நிறைவேறும்.
அதிர்ஷ்டமான நாட்கள்: மார்ச் 16, 17, 18, 19, 20. ஏப்ரல் 04, 05, 06, 13, 14.
சந்திராஷ்டம நாட்கள்: ஏப்ரல் 08, 09, 10.