மூன்று மருத்துவர்களை இழந்தது பிரான்ஸ்
பிரான்சில் கொரோனா வைரஸ் தொற்றிற்குள்ளான மூன்று மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர்.
பாரிசின் வடபகுதியில் உள்ள மருத்துவமனையொன்றில் விபத்து மற்றும் அவசர கிசிச்சை பிரிவை சேர்ந்த மருத்துவர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என பிரான்சின் சுகாதார அமைச்சர் நேற்று உறுதி செய்திருந்தார்.
இதேவேளை மகப்பேற்று நிபுணர் ஒருவரும்,மற்றொரு வைத்தியரும் பிரான்சின் கிழக்கு பகுதியில் உயிரிழந்துள்ளனர்.பிரான்சின் கிழக்கு பகுதியே வைரஸ் காரணமாக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஓய்வுபெற்ற போதிலும் தனது சகாக்களிற்கு உதவுவதற்காக மருத்துவமனைக்கு பணிக்கு சென்ற ஜீன் ஜாக் ரஜாபிந்திரானாசி என்ற மருத்துவரே முதலில் உயிரிழந்துள்ளார்.
முதன் முதலில் பிரான்சில் நோயாளர் தொற்று பதிவான மருத்துவமனையில் அவசர சேவை பிரிவில் பணியாற்றிய வேளையே இவர் நோய் தொற்றிற்குள்ளாகியுள்ளார்.
எனது தந்தை ஒரு நாயகன் என்ற தலைப்பி;ன் கீழ் மருத்துவரின் குடும்பத்தினர் இறப்பை பதிவு செய்துள்ளனர்.
எனது தந்தை ஓய்வுபெற்றவர் அவர் நினைத்திருந்தால் பணியாற்றுவதை நிறுத்தியிருக்கலாம்,ஆனால் அவர் தனது சகாக்களின் சுமையை குறைப்பதற்காக பணிக்கு சென்றார் என மருத்துவரின் மகன் தெரிவித்துள்ளார்.
அவர் தியாகம் செய்தார்,அவர் உதவ விரும்பினார்,அவர் அந்த வேலையை நேசித்ததன் காரணமாக தொடர்ந்தும் பணியற்றினார், அது அவரது வாழ்க்கை இது நியாயமான விடயமல்ல நாங்கள் சீற்றமடைந்துள்ளோம் துயரமடைந்துள்ளோம் என மருத்துவரின் மகன் தெரிவித்துள்ளார்.
வைத்தியரின் குடும்பத்தினரின் துயரத்தை தான் பகிர்ந்துகொள்வதாக தெரிவித்துள்ள சுகாதார அமைச்சர் வைரசிற்கு எதிரான போராட்டத்தில் மருத்துவர்கள் பெரும் விலையை செலுத்துகின்றனர் என்பதை ஏற்றுக்கொண்டுள்ளார்.