செய்திகள்

அடுத்து வரும் பொது தொற்றுநோய்க்கு எதிராக போராட உலகம் தாயராக இருக்க வேண்டும் – டெட்ரோஸ் அதானோம்!

அடுத்து வரும் பொது தொற்றுநோய்க்கு எதிராக போராட உலகம் சிறப்பாக தம்மை தாயர் செய்து கொள்ள வேண்டும் என உலக சுகாதார ஸ்தாபனத்தின்  தலைவர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார்.

சீனாவில் 2019 டிசம்பரில் கொரோனா வைரஸ் தொற்று அடையாளம் காணப்பட்டது முதல் இதுவரை  உலகளவில் 27.19 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டும்  888,326 பேர் இறந்தும் உள்ளனர்.

இந்நிலையில், திங்களன்று, கொரோனா வைரஸ் தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய  டெட்ரோஸ் அதானோம்,

“இது கடைசி தொற்றுநோயாக இருக்காது. “இவ்வாறான தொற்றுநோய்கள் வாழ்க்கையின் உண்மை என்பதை வரலாறு நமக்குக் கற்பிக்கிறது. ஆனால் அடுத்த தொற்றுநோய் வரும்போது, உலகம் அதனை வெற்றிகரமாக முகம் கொடுக்க தயாராக இருக்க வேண்டும் – இந்த நேரத்தில் இருந்ததை விட தயாராக இருக்க வேண்டும். ” என தெரிவித்துள்ளார்.

Back to top button