Niver Cyclone : அடுத்த 24 மணிநேரத்திற்குள் கொந்தளிக்க போகும் நிவர் புயல்; எச்சரிக்கையுடன் இருக்க மக்கள் செய்யவேண்டியவை
India Tamil News
India News – தெற்கு வங்கக்கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை தாழ்வு மண்டலமாக மாறியிருக்கிறது.
அடுத்த 24 மணி நேரத்தில் இது வலுப்பெற்று புயலாக (Niver Cyclone) உருவெடுக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.
இந்த புயலுக்கு நிவர் (Niver Cyclone) என பெயரிடப்பட்டிருக்கிறது. இந்தப் புயல் நாளை 25-ம் திகதி மாமல்லபுரத்துக்கும், காரைக்காலுக்கும் இடையே கரையைக் கடக்கலாம் என்றும்,
2021ம் ஆண்டு இந்த ராசிக்காரர்கள் காட்டில் பண மழை தான்! யார் அவர்கள் தெரியுமா?
அப்போது சென்னை, புதுச்சேரி, கடலூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றும், கடல் பகுதிகளில் சூறாவளியும் வீசும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.
இந்த நேரத்தில் பொதுமக்கள் செய்யவேண்டியவை, செய்யக்கூடாதவை என்னவென்று நினைவுறுத்துவது அவசியமாகிறது.
புயல் (Niver Cyclone) ஏற்படும்போதும், புயலுக்கு பின்னும் கவனமாக இருக்கவேண்டிய சில விஷயங்களை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்துகிறது.
2021ம் ஆண்டு இந்த ராசிக்காரர்கள் காட்டில் பண மழை தான்! யார் அவர்கள் தெரியுமா?
1. மின் சப்ளை, கேஸ் சிலிண்டர் இரண்டும் கட்டுக்குள் உள்ளதா என்பதைப் பார்க்கவும், இல்லையெனில், புயல் வரும் வேளையில் மெயின் விநியோகத்தை நிறுத்திவிடவும்.
2. வீட்டுக் கதவுகளை பூட்டி வைத்திருங்கள்
3. வீடு பாதுகாப்பான இடத்தில் இல்லையெனில், புயலுக்கு முன்பாகவே பாதுகாப்பான இடத்துக்கு செல்லுங்கள்.
4. வதந்திகளை நம்பாதீர்கள். கொதிக்கவைத்த நீரை அருந்துங்கள்.
5. கட்டுமானம் நடக்கும், கட்டிடம் பலவீனமான கட்டிடங்களுக்கு பக்கத்தில் போகாதீர்கள்.
மின்கம்பங்கள் பக்கத்தில் செல்லாதீர்கள். மின் ஒயர்கள் அறுந்துகிடக்க வாய்ப்புள்ளதால் கவனமாக இருங்கள்.