பிரித்தானிய அரசாங்கம் தனது குடியேற்ற அணுகுமுறையை மாற்றுகிறது. ஆஸ்திரேலியாவில் இருப்பது போல், திறமை அடிப்படையில் புள்ளிகள் வழங்கப்பட்டு, தேவையான திறமைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். இருந்தாலும், இந்தப் புதிய முறை நடைமுறைக்கு வந்தால் தேவையான தொழிலாளர்களுக்குப் பற்றாக்குறை ஏற்படும் என்று அவதானிகள் எச்சரிக்கிறார்கள்.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா ஜனவரி மாதம் வெளியேறியது நீங்கள் அறிந்த செய்தி. தற்போது அதன் குடியேற்ற முறையை பிரித்தானியா மாற்றப்போகிறது.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதற்கு முன்னர், ஒன்றியத்தில் அங்கம் வகித்த 27 நாடுகளிலிருந்தும் மக்கள் பிரித்தானியாவில் வாழவும் வேலை செய்யவும் முடியும்.
-
கீரை வகைகளும், அதன் ஆரோக்கிய நன்மைகளும்:February 12, 2025
-
இஸ்ரேலிற்கு படையினரை அனுப்பபோவதில்லை- அமெரிக்காOctober 10, 2023
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதற்கு குடியேற்ற கொள்கைகள் ஒரு முக்கிய காரணம்.
தனது எல்லையை பாதுகாக்க பிரித்தானியாவிற்கு உரிமை உண்டு என்கிறார் அதன் உள்துறை அமைச்சர் ப்ரீதி பட்டேல்.
“சில தசாப்தங்களுக்குப் பின்னர் பிரித்தானியா தனது சொந்த குடியேற்ற முறையை அறிமுகப்படுத்தப் போகிறது” என்று கூறிய ப்ரீதி பட்டேல், “இந்த மாற்றங்களின் பின்னர், குறைந்த திறன் கொண்டவர்கள் பிரித்தானியாவிற்குள் வர முடியாது” என்றும் கூறினார்.
குடியேற விரும்புவோரின் திறன்கள், படிப்பு, வருமானம் மற்றும் அவர்கள் செய்ய விரும்பும் வணிகம் போன்றவற்றை புதிய குடிவரவு முறை ஆராயும். பிரித்தானியாவில் குடியேற விரும்புபவர்கள் ஆஸ்திரேலிய டொலர் பெறுமதியில் 50,000ற்கும் அதிக சம்பளம் பெறும் வேலை ஒன்றை செய்ய ஒப்பந்தம் ஏற்படுத்தியிருக்க வேண்டும். குறைந்த வருமானம் ஈட்டுபவர்கள் வேறு தேவைப்படும் திறமைகளைக் கொண்டவர்களாக இருக்க வேண்டும்.
திறமை அடிப்படையில் குடிபெயர்வோருக்குத் தற்போது பல்கலைக்கழக பட்டம் அவசியமாக தேவைப்படுகிறது, ஆனால் எதிர்காலத்தில் அவர்கள் பல்கலைக்கழக புகு முக தேர்வு (+2 அல்லது HSC போன்ற) பிரித்தானியாவின் A Level தகுதி போதுமானதாகும்.
தற்போது ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து சென்று பிரித்தானியாவில் வாழும் ஆயிரக்கணக்கானவர்கள் விவசாயம், சுகாதாரம் மற்றும் உணவு சேவைகள் போன்ற தொழில்களில் குறைந்த ஊதியத்திற்கு வேலை செய்கிறார்கள்.
தற்போது பிரித்தானியாவில் வேலைவாய்ப்பு மிகக் குறைவாகவே உள்ளது. எட்டு மில்லியன் மக்கள் தொகையில் பெரும்பான்மையானவர்கள் மாணவர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்கள்.
“புள்ளிகள் அடிப்படையிலான குடியேற்ற விதிகளின் நோக்கம் குடிவருபவர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதாகும்” என்று ப்ரீதி பட்டேல் மேலும் கூறினார். இருப்பினும், குடிவருபவர்களின் எண்ணிக்கையை பிரித்தானியா இன்னும் நிர்ணயிக்கவில்லை.