செய்திகள்

சந்திரகிரகணம் இன்று : வெற்றுக்கண்ணால் பார்க்க முடியுமாம்

இவ் வருடத்திற்கான இரண்டாவது சந்திர கிரகணம் (penumbral lunar eclipses) இன்று 05 ஆம் திகதி நிகழவுள்ளது.

இலங்கை நேரப்படி இன்று (05) இரவு 11.15 மணியளவில் இச் சந்திர கிரகணம் ஆரம்பமாவதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜயரட்ன தெரிவித்துள்ளார்.

குறித்த சந்திர கிரகணம் நாளை அதிகாலை 2.34 மணிக்கு கிரகணம் நிறைவடைகிறது.

சந்திர கிரகணத்தின் உச்சம் நள்ளிரவு 12.54 க்கு இடம்பெறும் என்றும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜயரட்ன  மேலும் தெரிவித்தார்.

சூரியன் – பூமி – சந்திரன் ஆகியவை ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் போது சூரிய ஒளி நிலவின் மீது படாமல், பூமி மறைப்பதே சந்திர கிரகணம் என்று அழைக்கப்படுகிறது.

ஆசியா, ஐரோப்பியா, அவுஸ்திரேலியா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்களில் சந்திர கிரகணத்தை பார்க்க முடியும்.

இந்த கிரகணத்திற்கு ஸ்ட்ராபெரி சந்திர கிரகணம் (Strawberry Moon Eclipse) என்று அழைக்கப்படுகிறது.

இந்திய நேரப்படி இன்று இரவு 11.15 மணி முதல், நாளை அதிகாலை 2.34 மணி வரை சந்திர கிரகணம் தெரியும்.

வானிலையில் எந்த மாற்றமின்றி தெளிவாக இருக்கும்பட்சத்தில் இந்தியாவில் இதனை முழுமையாக காண முடியும்.

அறிவியலின் படி சந்திர கிரகணம் என்பது எந்த பாதிப்புமற்ற பாதுகாப்பான ஒன்று. எனவே சந்திர கிரகணத்தை பார்க்க எந்த முன்னெச்சரிக்கை மற்றும் சிறப்பு நடவடிக்கைகள் ஏதும் தேவையில்லை.

இருப்பினும் இந்திய புராணத்தின் படி சந்திர கிரகணத்தின் போது பல்வேறு அறிவுரைகள் மற்றும் செய்யக்கூடாதவை என்று சில விஷயங்கள் வரையறுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Back to top button