ஆன்மிகம்

உக்கிர சனியோடு கூட்டணி சேரும் செவ்வாய்! யாரையெல்லாம் ஆட்டிப்படைக்க குறி வைத்திருக்கிறார் தெரியுமா? இந்த ராசிக்கு பேரதிர்ஷ்டம்….

Originally published by manithan.com

பங்குனி மாதம் சூரியன் குருவின் வீடான மீனம் ராசியில் சஞ்சரிக்கிறார். நீர் ராசியில் சூரியன் சஞ்சரித்தாலும் வெயில் பட்டையை கிளப்பும்.

இந்த இடத்தில்தான் புதன் நீசமடையப்போகிறார். இந்த மாதத்தில் மகரத்தில் செவ்வாய் உச்சமடைய, சுக்கிரன் ஆட்சி பெற்று ரிஷபம் ராசியில் அமரப்போகிறார்.

இந்த மாதம் கிரகங்களின் சஞ்சாரம் அற்புதமாக இருக்கிறது. அதே நேரத்தில் மகரம் ராசியில் சஞ்சரிக்கும் சனியோடு செவ்வாய் கூட்டணி சேருவதுதான் சில பிரச்சினைகளை தரும்.

இந்த பங்குனி மாதத்தில் எந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் பாதிப்புகள் வரப்போகிறது என்று பார்க்கலாம்.

பிரச்சினைக்கு உரிய கூட்டணி

செவ்வாய் வேகமாகப் பேசி விரைந்து முடிக்கும் கிரகமென்றால், சனி எதிரே இருப்பவரின் பொறுமையைச் சோதிக்கும் அளவிற்கு நிதானம் தரும் கிரகம். கணவன்-மனைவி விவாகரத்துக்கான வாய்ப்புகளையே அதிகம் காட்டும் சேர்க்கை இது. மண வாழ்க்கையில் சூறாவளியை சந்தேகத்தாலும் பிடிவாதத்தாலும், ஈகோ பிரச்னையாலும் உண்டாக்கும். நீதிமன்றத்தில், எனக்கேற்ற துணை இவரல்ல என்று குற்றம்சாட்டி பிரிய வைப்பதெல்லாம் இந்த சேர்க்கைதான்.

மேஷம்

பத்தாம் வீடான தொழில் ஸ்தானமான மகரம் ராசியில் சனி செவ்வாய் கூட்டணி சேர்வதால் உங்களுக்கு நிறைய நன்மைகள் நடக்கப் போகிறது.

ராசிக்கு பத்தாம் இடமான ஜீவன ஸ்தானத்திற்கு செவ்வாயின் தொடர்பு ஏற்பட்டால் அதாவது, பத்தாம் வீட்டில் செவ்வாய் இருப்பது அல்லது பார்ப்பது, பத்தாம் அதிபதியுடன் சேர்க்கை, பார்வை பரிவர்த்தனை பெற்று இருப்பது உத்யோகத்திற்கு பலம் தரும் அமைப்பாகும். காலாகாலத்தில், முயற்சி செய்த உடனேயே நல்ல வேலை கிடைத்துவிடும்.

உங்க ராசிநாதன் உச்சம் பெற்று உங்களை பார்ப்பது சிறப்பான யோகத்தை கொடுக்கும். உங்களுக்கு தெம்பும் தைரியமும் அதிகமாகும். செவ்வாயின் பார்வை உங்க ராசிக்கு நான்காம் வீடு, ஐந்தாம் வீட்டின் மீது விழுவதால் பிள்ளைகள் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்க. உங்களின் உடல் ஆரோக்கியத்தையும் கவனிங்க.

ரிஷபம்

ரிஷபம் ராசிக்கு பாக்ய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் சனியோடு செவ்வாய் இணைகிறார். உங்க ராசிக்கு செவ்வாயின் பார்வை கிடைக்கிறது. மந்த நிலை மாறி சுறுசுறுப்பு அதிகமாகும்.

பிரச்சினைகள் தீரும். மிதுனம் ராசிக்காரர்களுக்கு ஏற்கனவே அஷ்டமத்து சனி ஆட்டி படைக்க கூடவே உச்சம் பெற்ற செவ்வாயின் சேர்க்கை ஒரு வழி செய்து விடும். பேச்சிலும் செயலிலும் நிதானமாக இருங்க. கோபத்தோடு எழுந்தா நஷ்டப்பட்டுதான் உட்காருவீங்க இந்த 45 நாட்கள் நீங்க கவனமாக இருங்க.

கடகம்

ஏற்கனவே கண்டச்சனி காலம் கவலையை தந்து கொண்டிருக்கிறது. இப்போது ஏழாம் வீட்டில் சனி, செவ்வாய் சேர்க்கை பெற்றிருக்கிறது. குடும்பத்தில் கணவன் மனைவி ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளுங்கள். சின்னச் சின்ன பிரச்சினைகள் வரலாம் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து போங்க. பெரிய பிரச்சினை எதுவும் வராமல் பார்த்துக்கங்க.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு ஆறாம் வீட்டில் இந்த கூட்டணி சேருகிறது. நோய் எதிரி கடன் ஸ்தானம். நோயாளிகள் கவனமாக இருங்க. கடன் பிரச்சினை அதிகமாகும் கவனமாக இருங்க. கடன் கிடைக்குதேன்னு வாங்கி போடாதீங்க. உங்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் வரலாம் கவனமாக இருங்க.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்கு மூன்றாம் வீடான முயற்சி ஸ்தானத்தில் சனி செவ்வாய் கூட்டணி சேருகிறது. இந்த கூட்டணியால் நீங்க செய்யும் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். அதே நேரத்தில் இளைய சகோதரர்களுடன் நீங்க சமாதானமாக போங்க சண்டை எதுவும் வேண்டாம்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இரண்டாம் வீடான குடும்ப ஸ்தானத்தில் இந்த கூட்டணி சேருகிறது. பேச்சில் கவனமாக இருங்க. யாரையும் கோபமாக பேசாதீங்க. சூடான வார்த்தைகள் குடும்பத்தில் பிரச்சினைகளை அதிகமாக்கிவிடும் எனவே எச்சரிக்கையாக பேசுங்க.

மகரம்

மகரம் ராசிக்காரங்களே உங்க ராசிக்கு ஜென்ம ஸ்தானத்தில் சனியும் செவ்வாயும் கூடுகின்றன. உடல் நலத்தில் பாதிப்பு வரலாம் கவனமாக இருங்க. சின்ன பிரச்சினைகள் வந்தாலும் உடனே மருத்துவமனைக்கு போங்க. சொந்த பந்தங்களுக்கு இடையே சின்னச் சின்ன பிரச்சினைகள் வரலாம். உங்க தலையில் கவனமாக இருங்க.

கும்பம்

ராசிக்கு விரைய ஸ்தானத்தில் இந்த கிரகங்கள் கூட்டணி சேருவதால் பணத்தை பத்திரமாக பாத்துக்கணும். நீங்க எதையும் பட்டுன்னு பேசிறாதீங்க. பயணங்களில் கவனமாக இருங்க. எதையும் எடுத்தேன் கவிழ்த்தேன்னு பேசாதீங்க.

மீனம்

மீனம் ராசிக்கு லாப ஸ்தானத்தில் செவ்வாய் சனி கூட்டணி சேருகிறது. இந்த கூட்டணி உங்க ராசிக்கு பண வருமானத்தை கொடுக்கப் போகிறது. அதே நேரத்தில் மூத்த சகோதரர்களின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்க. விட்டுக்கொடுத்து போங்க.

Back to top button