செய்திகள்

ஏழரை சனி முடிய கண்டச்சனி, அஷ்டம சனி என அடுத்தடுத்து வருடக்கணக்கில் ஆட்டி படைக்க போகும் 2020 இன் சனி பெயர்ச்சி! யாருக்கெல்லாம் ஆபத்து?

சனி இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடம் பாழ் என்பார்கள். திருக்கணித பஞ்சாங்கப்படி சனி பகவான் இப்போது மகரம் ராசியில் சஞ்சரிக்கிறார். சனி பகவான் பார்வை இப்போது மீனம், கடகம்,துலாம் ராசிகளின் மீது விழுகிறது. சனி பகவான் மேஷம் முதல் மீனம் 12 ராசிக்காரர்களுக்கு நன்மையும் தீமையும் கலந்த பலன்களை தருவார்.

சனி பகவான் கோச்சார ரீதியாக 3,6,9,10,11 ஆகிய இடங்களில் அமரும் போது அற்புதமான பலன்களை தருவார். அதே நேரம் ஏழரை சனி காலமான ஜென்ம சனி, பாத சனி, விரைய சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி, கண்டச்சனி காலகங்களில் சில கஷ்டங்களை கொடுத்து உலகம் இப்படித்தான் இதுதான் வாழ்க்கை என்று புரிய வைப்பார்.

இந்த சனிப்பெயர்ச்சியால் யார் யார் கவனமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த பதிவு. இது உங்களை பயமுறுத்துவதற்காக இல்லை ஒரு எச்சரிக்கை பதிவுதான்.

யாரெல்லாம் கவனமாக இருக்க வேண்டும் தெரியுமா?

சனி பகவான் சிலருக்கு சில கஷ்டங்களை கொடுத்து அதன் மூலம் படிப்பினைகளை கொடுப்பார். இதுதாண்ட உலகம் இப்படித்தான் வாழ்க்கை இருக்கும் என்று புரிய வைத்து விடுவார். கண்டச்சனியை இரண்டரை ஆண்டு காலம் அனுபவித்த மிதுனம் ராசிக்காரர்கள் இப்போது அஷ்டம சனியில் அடி வாங்கிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு இன்னும் இரண்டரை வருடம் வாழ்க்கை ஒரு பக்கத்தை உணர வைத்து விடுவார். ஏழரை சனி ஏழரை வருட கஷ்டம் என்றால் கண்டச்சனி, அஷ்டம சனி என அடுத்தடுத்து மொத்தம் ஐந்து வருடங்கள் அடி பட வைத்து விடுவார் சனிபகவான்.

என்ன செய்யக்கூடாது?

கண்டச்சனியோ அஷ்டம சனியோ முதலில் கவனமாக இருக்கணும். புதிய பிசினஸ் எதையும் ஆரம்பிக்காதீங்க. இருக்கிறதை எல்லாம் பிடிங்கிக்கொண்டு விட்டு விடுவார். கடன்காரர்களாக நிற்க வைத்து அவமானப்பட வைத்து விடுவார். சொந்த பந்தங்களின் உண்மை முகங்களை உணர வைத்து விடுவார் எனவே முதல் காரியமாக இருக்கிற வேலையில் செய்யும் தொழிலில் ரொம்ப கவனமாக இருங்க. இருக்கிறதை விட்டு விடு பறக்கிறதுக்கு ஆசைப்படாதீங்க.

எச்சரிக்கை தேவை!

இந்த சனிப்பெயர்ச்சி காலத்தில் மிதுனம் ராசிக்கு எட்டில் சனி அதாவது அஷ்டம சனியாக சஞ்சரிக்கிறார். கணவன் மனைவி உறவில் கவனமாக இருக்கணும். தேவையில்லாத சண்டை சச்சரவுகள் சந்தேகங்கள் வரலாம். அதே போல தேவையற்ற பேச்சுக்களை தவிர்த்து விடுங்கள். எந்த காரியம்திலும் யாரை நம்பியும் பணம் கடன் வாங்கி கொடுக்காதீங்க. முக்கியமாக ஜாமீன் கையெழுத்து போடாதீங்க. ரொம்ப விழிப்புணர்வோட இருக்கணும். வண்டி வாகனங்களில் போகும் போது எச்சரிக்கையாக இருங்க.

கடகத்தை கைவிட மாட்டார்

கண்ட நேரத்தில் கண்டதை சாப்பிடாதீங்க. மனதையும் வாயையும் கட்டுப்படுத்துங்கள். நோய் வந்து விட்டதே என்று பதறாதீர்கள். அதை எப்படி குணப்படுத்துவது என்று பாசிட்டிவ் மனதோடு எதிர்கொள்ளுங்கள். கடக ராசிக்கு கண்டச்சனி இருப்பதால் குடும்பத்தில் குழப்பங்கள் வரலாம் கவனமாக கையாளுங்கள். உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். வயிறு பிரச்சினைகள் வரலாம். சரியான நேரத்திற்கு சாப்பிடுங்கள். கடவுள் கைவிட மாட்டார்.

சங்கடங்கள் போக்கும் சனிபகவான்

துலாம் ராசிக்கு அர்த்தாஷ்டம சனி. சனிபகவானுக்கு துலாம் ராசி ரொம்ப பிடிக்கும் காரணம் துலாம் ராசியில்தான் சனிபகவான் உச்சமடைகிறார். அவருடைய உச்ச வீட்டுக்காரர். சனி பகவான் அர்த்தாஷ்டம சனியாக சுக ஸ்தானத்தில் சனி சஞ்சரிப்பதால் வண்டி வாகனங்களில் போகும் போது கவனமாக இருங்க. வண்டி வாகனங்களில் போது முன்னெச்சரிக்கையாக இருங்க. உங்களின் சுகம் கெடும். கொஞ்சம் எச்சரிக்கையாக இருங்க. இரண்டரை ஆண்டுகாலம் உங்களுக்கு சில படிப்பினைகளை தந்து விட்டு கடந்து செல்வார்.

சனியை சரணடையுங்கள்

சாட்சிக்காரனை சரணடைவதை விட சண்டைக்காரன் காலில் விழலாம். சனி பகவானால் ஏற்படும் பாதிப்புகள் நீங்க பல பரிகாரங்கள் இருந்தாலும் ஆஞ்சநேயர், விநாயகர் கோவிலுக்கு போங்க பிரச்சினைகள் தீரும். அதே போல சனிக்கிழமை எள் எண்ணெய் தீபம் ஏற்றி வழிபடலாம். சனி பகவான் மங்கள சனீஸ்வரராக, பாதாள சொர்ண சனீஸ்வரராக அருள்பாலிக்கும் வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடம் சென்று அங்கு நடைபெறும் சனிதோஷ நிவர்த்தி யாகங்களில் பங்கேற்கலாம். இந்த சனி பெயர்ச்சி காலத்தில் ரொம்ப அமைதியாக இருங்க இதுவும் கடந்து போகும் கவலை வேண்டாம்.

Back to top button