செய்திகள்

கடும் கட்டுப்பாடுகளுடன் வெளியானது புதிய சுகாதார வழிகாட்டி – முழு விபரம் இதோ !

நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய கொரோனா தொற்று பரவல் நிலைமையையடுத்து சுகாதார அமைச்சினால் புதிய சுகாதார வழிகாட்டி வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, குறித்த சுகாதார வழிகாட்டியில் அரசாங்க ஊழியர்கள் பொது நிர்வாகம் உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி. அமைச்சு வெளியிட்ட சுற்றறிக்கைக்கு அமைவாக வருகைத்தர வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

தனியார்துறை ஊழியர்களில் குறைந்தளவானோர் அலுவலகத்திற்கு சமூகமளிக்க வேண்டுமெனவும், ஏனையோர் வீடுகளில் இருந்து பணிபுரியுமாறும் புதிய சுகாதார வழிகாட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொவிட் அல்லாது உயிரிழப்போரின் இறுதிக்கிரியைகள் 24 மணித்தியாலத்திற்குள் இடம்பெற வேண்டும் எனவும் அதிகபட்சமாக 25 பேருக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்படும் எனவும் சுகாதார வழிகாட்டியில் குறிப்பிட்டுள்ளது.

பொது போக்குவரத்து சேவைகளில் ஆசனங்களின் எண்ணிக்கைக்கு அமைவாக மாத்திரமே பயணிகளை ஏற்றிச்செல்ல வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய சுகாதார வழிகாட்டலுக்கமைய மறு அறிவித்தல் வரை திரையரங்குகள் மற்றும் சிறுவர் பூங்காக்களை மூடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பராமரிப்பு நிலையங்கள், சிறைச்சாலைகள், அறநெறி பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், உயர் கல்வி நிலையங்கள், தனியார் வகுப்பு நிலையங்கள் ஆகியன மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

கடும் கட்டுப்பாடுகளுடன் வெளியானது புதிய சுகாதார வழிகாட்டி – முழு விபரத்தை அறிய இங்கே அழுத்துங்கள்

Back to top button