கடைசி நாளில் ஏற்பட்ட திடீர் மாற்றம்.. பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறுவது இவர் தானா…?
பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவடைய இன்னும் 5 வாரங்களே உள்ள நிலையில், இந்நிகழ்ச்சி மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.
இந்நிலையில், இந்த வாரம் யார் வெளியேறுவார் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், நேற்றையை வோட்டிங் லிஸ்ட்டில் ஷெரின் தான் மிகவும் குறைவான வாக்குகளை பெற்றிருந்தார்.
இதனால், கட்டாயம் ஷெரின் இந்த வாரம் வெளியேறிவிடுவார் என்று அனைவரும் யோசித்துக் கொண்டிருக்கையில், ஒரே நாளில் வோட்டிங் லிஸ்டில் அதிரடி மாற்றம் ஏற்பட்டுள்ளது.
அதாவது, வோட்டிங் லிஸ்ட்டில் நான்காவது இடத்தில் இருந்த சேரன் சட்டென்று வாக்குகள் கடைசி நாளில் குறைவாக பெற்று கடைசி இடத்திற்கு வந்துள்ளார்.
இதனால், சேரன் வெளியேறிவிடுவார் என்று மக்கள் மிகவும் வருத்தத்தில் உள்ளனர்.
பொறுத்திருந்து பார்க்கலாம், எதிர்பாராததை எதிர்பார்க்க வைப்பது தானே பிக்பாஸ். ஒருவேளை சேரன் சீக்ரெட் ரூமில் கூட வைக்கப்படலாம் என்று பேச்சு அடிபட்டு வருகிறது. பார்க்கலாம் என்ன நடக்கிறது என்று.