கந்தக்காடு கொரோனா எதிரொலி ; வெலிக்கந்த, ராஜாங்கனை, கபராதுவ, லங்காபுர பகுதிகளில் தொற்றாளர்கள் அடையாளம்
கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் ஏற்பட்ட கொரோனா தொற்றுப்பரவலையடுத்து அங்கு இருந்தவர்களுடன் தொடர்புகளை பேணிய மேலும் 5 கொரோனா தொற்றாளர்கள் இன்றையதினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
குறித்த 5 பேரில் இருவர் வெலிக்கந்த பகுதியிலும் ஏனைய மூவரும் ராஜாங்கனை, கபராதுவ, லங்காபுர ஆகிய பகுதிகளில் இருந்தும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2,464 ஆக உயர்வடைந்துள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான 1,980 பேர் குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனர்.
கொரோனா தொற்று நோயாளர்களில் 473 பேர் தொடர்ந்தும் நாடு முழுவதும் உள்ள கொரோனாவுக்கான சிகிச்சை அளிக்கும் வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சைபெற்று வருகின்றனர்.
இதேவேளை, 65 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளான 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.