செய்திகள்

கொவிட் தொற்றை திறம்பட கையாளும் நாடுகள் பட்டியலில் இலங்கைக்கு பத்தாம் இடம்

கொரோனா வைரஸ் தொற்றினை மிகவும் திறம்பட கையாள்வது குறித்த அவுஸ்திரேலிய சிந்தனைக் குழுவான லோவி இன்ஸ்டிடியூட்டின் புதிய பகுப்பாய்வில் இலங்கை பத்தாவது இடத்தில் உள்ளது.

இந்த பட்டியலில் நியூஸிலாந்து முதல் இடத்தை பிடித்துள்ளதுடன் அவுஸ்திரேலியா எட்டாம் இடத்திலும் உள்ளது.

லோவி இன்ஸ்டிடியூட் கிட்டத்தட்ட 100 நாடுகளின் கொரோனா வைரஸ் நிலைமைகளை கருத்திற்கொண்டே இந்த தரவினை வெளிப்படுத்தியுள்ளது.

ஒவ்வொரு நாட்டிலும் கொவிட்-19 நோயாளர்களது எண்களையும், உறுதிப்படுத்தப்பட்ட இறப்புகள் மற்றும் சோதனை விகிதங்களையும் ஆராய்ச்சியாளர்கள் கண்காணித்தனர்.

இதில் நியூசிலாந்து முதலிடத்தைப் பிடித்தாலும், வியட்நாம், தாய்வான் மற்றும் தாய்லாந்து ஆகியவை முறையே இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களைப் பிடித்துள்ளன.

கொவிட் தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்கா 94 ஆவது இடத்திலும், இந்தோனேஷியாவும் இந்தியாவும் முறையே 85 மற்றும் 86 ஆவது இடங்களையும் பிடித்துள்ளன.

எனினும் பொதுவில் கிடைக்கக்கூடிய சோதனை தரவு இல்லாததைக் காரணம் காரணத்தினால் லோவி, இன்ஸ்டிடியூட் சீனாவின் தரவுகளை மதிப்பிடவில்லை.

கொவிட் தொற்றை திறம்பட கையாளும் நாடுகள் பட்டியலில் இலங்கைக்கு பத்தாம் இடம் 1

Back to top button