செய்திகள்

கொரோனாவிலிருந்து பாதுகாக்க புகைத்தலை தவிர்க்குமாறு வேண்டுகோள்

கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு, புகைத்தலை கைவிடுவது தற்போதைய சூழ்நிலையில் மிகவும் உகந்தது என்று, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் அல்லது (COVID-19) பாதிப்புக்குள்ளாகுவோருக்கு, நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டு உயிரிழப்பை ஏற்படுத்தும். இதன் போது ஈரல் பலவீனமாக இருந்தால், இந்த உயிரிழப்பு எளிதில் ஏற்படக்கூடும்.

சிகரட் முதலானவற்றைப் புகைப்பதினால் ஈரல் பலவீனமடையும் என்பதினாலேயே, புகைத்தலைத் தவிர்க்குமாறு வலியுறுத்தப்படுகின்றது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Back to top button