செய்திகள்

கொரோனாவுக்கு எதிரான முதலாவது தடுப்பூசி வெற்றி : தனது மகளுக்கும் செலுத்தியதாக புட்டின் அறிவிப்பு

கொரோனா வைரஸ் தடுப்பூசியை அறிமுகப்படுத்தியதுடன் அதில் வெற்றிபெற்றுள்ளதாகவும் கொரோனாவுக்கு எதிரான முதல் தடுப்பூசியை அறிமுகப்படுத்திய முதல் நாடாக ரஷ்யா திகழ்வதாகவும் அந்நாட்டின் ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ள அதேவேளை, அந்த தடுப்பூசியை தனது மகளுக்கும் செலுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசிக்கு அனுமதியை ரஷ்ய சுகாதாரத்துறை வழங்கியுள்ள நிலையில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை வழங்கிய முதல் நாடாக ரஷ்யா உள்ளது.

பாதுகாப்பு மற்றும் செயல்திறனைச் சோதிப்பதற்கான மருத்துவ பரிசோதனைகளின் இறுதிக் கட்டம் தொடர்ந்தாலும், இந்த வளர்ச்சி ரஷ்யாவிலுள்ள மக்களில் பெரும்பாலானோருக்கு தடுப்பூசி போடுவதற்கு வழிவகுக்கிறது.

உலகில் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுதம் போது ரஷ்யா, தடுப்பூசியை வெளியிடுவதற்கான வேகம் ஒரு பயனுள்ள தயாரிப்புக்கான உலகளாவிய போட்டியில் வெல்வதற்கான அதன் உறுதியை எடுத்துக்காட்டுகிறது.

அத்துடன் ரஷ்யாவின் அறிவியல் மற்றும் பாதுகாப்பிற்கு சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளதுடன் தேசிய கெளரவத்தையும் ஏற்படுத்தக்கூடும்.

இந்நிலையில் கொரோனா தடுப்பூசி பந்தயத்தில் உலகின் அனைத்து நாடுகளையும் முந்த விரும்பிய ரஷ்யா, கொரோனா வைரஸ் தடுப்பூசியை வெளியிட்ட உலகின் முதல் நாடாக பதிவு செய்துள்ளது. ரஷ்ய ஜனாதிபதி புட்டின் இதை செய்தியாளர்களிடம் முறைப்படி இன்று அறிவித்தார்.

ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் கமலேயா ஆராய்ச்சி நிறுவனம் ஆகியன இணைந்து உருவாக்கியுள்ள இந்த தடுப்பூசி சோதனை கட்டமாக பொதுமக்களுக்கு இன்று முதல் வழங்கப்படுகின்றது.

மருத்துவ வல்லுநர்கள் மற்றும் வயோதிபர்களுக்கு முதலில் தடுப்பூசி போடப்பட உள்ளது. அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி பலப்படுத்தப்பட்ட பின்னர் தடுப்பூசியின் செயல்திறன் தீர்மானிக்கப்பட உள்ளதாகவும் அக்டோபரில் முழுமையாக மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்றும் ஏற்கனவே ரஷ்யா கூறியிருந்தது.

இந்நிலையில் கொரோனோவுக்கு எதிரான உலகின் முதல் தடுப்பூசியை பதிவு செய்துள்ளோம் என ரஷ்ய அதிபர் புட்டின் அறிவித்துள்ளார். உடல் நிலை சரியில்லாமல் இருக்கும் தனது சொந்த மகளுக்கே புதிய கொரோனா வைரஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் புட்டின் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

சுகாதார அமைச்சர் மிகைல் முராஷ்கோவிடம் தடுப்பூசி குறித்து தெரிவிக்கும்படி கேட்டுக்கொண்ட புட்டின். “இது மிகவும் திறம்பட செயல்படுகிறது” என்பதும், “நிலையான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது” என்பதும் தனக்குத் தெரியும் என்றார்.

கொரோனா வைரஸ் தொற்றுநோயைத் தடுக்கும் முயற்சியில் 100 க்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் உலகம் முழுவதும் உருவாக்கப்படுகின்றன. இந்நிலையில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் தரவுகளின்படி, குறைந்தது நான்கு தடுப்பூசிகள் மூன்றாம் கட்ட மனித சோதனைகளில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Back to top button