செய்திகள்
கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் நால்வர் குணமடைந்தனர்
குணமடைந்த நால்வரும் வைத்தியசாலையிலிருந்து வௌியேறியுள்ளதாக IDH வைத்தியசாலையின் பணிப்பாளர் ஹசித அத்தநாயக்க தெரிவித்தார்.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, இன்று மாலை 4 மணி வரை நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவரும் பதிவாகவில்லை என சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதுவரை நாட்டில் 102 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
இவர்களில் இருவர் தேசிய தொற்றுநோயியல் வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா தொற்று சந்தேகத்தில் 237 பேர் மருத்துவக் கண்காணிப்பிலுள்ளனர்.