கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை வித்தியசாமான முறையில் கூறிய ராகவா லாரன்ஸ்!
நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் தனது கடின உழைப்பினால் தமிழ் திரையுலகில் முன்னுக்கு வந்தவர்.
இவரின் ஆரம்ப காலங்களில் திரைப்படங்களில் குரூப் டான்சராக பணியாற்றி வந்த இவர் பின்னர் நடன இயக்குனராக பிரபலமானார்.
அதனை தொடர்ந்து திரைப்படங்களின் பாடல்களுக்கு மட்டும் நடனமாடி வந்த ராகவா லாரன்ஸ், முனி திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.
மேலும் இவரே இயக்கி நடித்த திரைப்படங்களான காஞ்சனா, காஞ்சனா 2 மற்றும் காஞ்சனா 3 திரைப்படங்கள் மிக வெற்றியடைந்தது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை திரையுலகை சேர்ந்த பல பிரபலங்களும் அளித்து வருகின்றனர்.
அந்த வரிசையில் நடிகர் ராகவா லாரன்ஸும் தனது டிவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில் மாற்று திறனாளி ஒருவருடன் சேர்ந்து இவரும் கைகளை சுத்தமாக வைப்போம் என கூறியுள்ளார்.
#StopCoronaVirus #StopTheSpread pic.twitter.com/MLlcs3Mnii
— Raghava Lawrence (@offl_Lawrence) March 21, 2020