சற்று முன்னர் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவித்தல்..!
கம்பஹா மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கு நாளை (05.10.2020) முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (09.10.2020) வரை விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, கம்பஹா மாவட்டத்தில் நடைபெறும் அனைத்து தனியார் வகுப்புகளுக்கும் நாளை (05.010.2020) முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (09.10.2020) வரை விடுமுறை வழங்குமாறும் கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் மேலும் தெரிவித்துள்ளார்.
திவுலபிடிய பிரதேசத்தை சேர்ந்த 39 வயதுடைய பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதையடுத்து, திவுலபிடிய மற்றும் மினுவங்கொட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதால், கம்பஹா மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கு மேற்படி விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
Update
நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளும் இரண்டாம் தவணை விடுமுறைக்காக நாளை (05) முதல் மூடப்படுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
கல்வியமைச்சு வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக கம்பஹா மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர் ஒருவர் அடையாளங் காணப்பட்டதை தொடர்ந்து கம்பஹா மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் ஒரு வார காலத்திற்கு மூடப்படுவதாக கல்வியமைச்சு அறிவித்திருந்த நிலையிலேயே தற்போது நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இரண்டாம் தவணை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.