செய்திகள்

சீனாவில் அதிகரிக்கும் கொரோனா வைரஸ்

சீனாவில் 49 புதிய கொரோனா தொற்றாளர்கள் நேற்றைய தினம் பதிவாகி உள்ளதாக சீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதில் 10 பேர் வெளிநாட்டில் இருந்து வந்தவர்களும் மற்றும் 39 பேர் உள்நாட்டில் உள்ளவர்களுக்கும் இவ்வாறு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதில் கொரோனா தொற்றுக்குள்ளான 36 பேர் பீஜிங்கில் உள்ளவர்கள்.

இதை தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளதுடன் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டு உள்ளது.

சீனாவின் துணைப் பிரதமர் சன் சுன்லன்  “தீர்க்கமான நடவடிக்கைகளுக்கு” அழைப்பு விடுத்துள்ளார்,

ஏனெனில் நேற்று, அனைத்து அரசு சுகாதார நிறுவனங்களும் ஜின்பாடி உணவு சந்தைக்கு வருகை தந்த அல்லது அங்கு இருந்த எவருடனும் தொடர்பு கொண்டிருந்த ஊழியர்களை  14 நாட்கள் தனிமைப்படுத்தலை மேற்கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டதுடன் குறித்த சந்தையும் மூடப்பட்டது.

அதைச் சுற்றியுள்ள பல குடியிருப்பு தோட்டங்கள் மூடப்பட்டுள்ளன. குறித்த பகுதியில் பாடசாலைகள் மற்றும் ஆரம்ப பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன.

குறித்த பகுதியில் வசிக்கும் 46 ஆயிரம் குடியிருப்பாளர்களுக்கு வைரஸ் பரிசோதனைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பரிசோதிக்கப்பட்டுள்ளனர்.

“பீஜிங் ஒரு அசாதாரண காலத்திற்குள் நுழைந்துள்ளது” என்று நகர செய்தித் தொடர்பாளர் சூ ஹெஜியன் தெரிவித்து உள்ளார்.

சீனாவில் கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் உள்நாட்டில் முதன்முதலில் தோன்றியது. பெரும்பாலும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. ஆனால் பின்னர் கடந்த வாரம் தலைநகரில் ஒரு புதிய வைரஸ் தொற்றாளர்கள் கண்டறியப்பட்டனர்.

பீஜிங்கில் இனங்காணப்பட்ட தொற்றாளர்களுக்கு மேலதிகமாக, பீஜிங்கைச் சுற்றியுள்ள ஹூபே மாகாணத்தில் மூன்று கொரோனா தொற்றாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டு  இருப்பதாக சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.

Back to top button