செய்திகள்

சுய தனிமைப்படுத்தலை முறையாக செய்யாத வெளிநாட்டிலிருந்து வந்த 142 பேருக்கு எதிராக நடவடிக்கை

சுய தனிமைப்படுத்தல், தொற்று நீக்கல் நடவடிக்கைகளை  முறையாக செய்யாத வெளிநாட்டிலிருந்து வந்த 142 பேருக்கு,  தனிமைப்படுத்தல், தொற்று நீக்கல் நடவடிக்கைகளை சரியான முறையில் முன்னெடுக்குமாறு இரு நீதிமன்றங்கள் உத்தரவு பிறப்பித்துள்ளன.

ஹட்டன் மற்றும் மாரவில நீதிவான் நீதிமன்றங்கள் இது தொடர்பிலான நீதிமன்ற உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாக பொலிஸாரும், பொது சுகாதார பரிசோதகர்களும் தெரிவித்தனர்.

வெளிநாட்டிலிருந்து வந்து  தனிமைப்படுத்தல், தொற்று நீக்கல் நடவடிக்கைகளுக்குட்படாத அம்பகமுவ பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 76 பேருக்கும் மாரவில பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 66 பேருக்கும்  எதிராக முறையாக தனிமைப்படுத்தலில் ஈடுபடவில்லை என பொலிஸாரும் பொது சுகாதார பரிசோதகர்களும் தொற்று நோய் தடுப்பு கட்டளை சட்டத்தின் கீழ் அறிக்கை சமர்ப்பித்தனர். அதனை ஆராய்ந்தே நீதிமன்றங்கள் குறித்த 142 பேருக்கும்  முறையாக சுய தனிமைப்படுத்தல் மற்றும் தொற்று நீக்கல் நடவடிக்கையில் ஈடுபட உத்தரவிட்டுள்ளது

Back to top button