செய்திகள்

நாட்டில் நேற்று 1,466 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம்

நாட்டில் நேற்யை தினம் மொத்தமாக 1,466 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இலங்கையில் ஒரே நாளில் பதிவான அதிகளவான கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை இது என்பதுடன், தொடர்ந்து இரண்டாவது நாளாகவும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொரோனா நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

தற்போது நாட்டில் பதிவான மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 104,953 ஆக காணப்படுகிறது.

நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட புதிய கொரோனா நோயாளர்களில் 1,419 பேலியகொட – மினுவாங்கொட கொவிட்-19 கொத்தணிப் பரவலுடன் தொடர்புடையவர்கள் ஆவர்.

அது தவிர நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளிலிருந்து 32 பேரும், வெளிநாடுகளிலிருந்து வருகை தந்த 15 பேரும் இவ்வாறு அடையாளம் காணப்பட்ட புதிய கொரோனா நோயாளர்களில் அடங்குவர்.

இதேவேளை நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளான 227 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளை விட்டு வெளியேறியுள்ள நிலையில், குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கையும் 95,083 ஆக உயர்வடைந்துள்ளது.

தற்சமயம் நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலை மற்றும் சிகிச்சை நிலையங்களில் 9,194 பேர் சிகிச்சை பெற்று வருவதுடன், கொவிட்-19 தொற்று சந்தேகத்தில் 1,041 பேர் வைத்தியக் கண்காணிப்பில் உள்ளனர்.

இதேவேளை இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 655 இல் இருந்து 661 ஆக அதிகரித்துள்ளது

இதற்கமைவாக இலங்கையில் நேற்றைய தினம் கொரோனா வைரஸ் தொடர்பான மேலும் 6 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதி செய்துள்ளார்.

Back to top button