செய்திகள்

கொரோனாவிலிருந்து தப்பிக்கும் முன்னர் மற்றுமொரு வைரஸ் – ஒருவர் பலி 32 பேர் மருத்துவமனையில்…

195 நாடுகளுக்கு கொவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் உயிர்கொல்லி தொற்றினை இலவசமாக பரிசளித்தது சீனா.

இதுவரை உலகலாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்றினால் 3 லட்சத்து 81 ஆயிரத்து 761 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 16 ஆயிரத்து 59 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் கொரோனாவிலிருந்து உலக நாடுகள் மீண்டெழுவதற்கு முன்னதாக சீனாவில் புதியதொரு வைரஸ் தாக்கத்தினால் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

Hanta  என அழைக்கப்படும் இந்த வைரஸ் தொற்றினாலேயே நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நபர் பயணித்துக்கொண்டிருக்கையில் திடீரென பேருந்திலேயே உயிரிழந்துள்ளார்.

குறித்த நபரின் நிரந்தர வசிப்பிடமாக Yunnan மாகாணத்திலிருந்து Shandong மாகாணத்திற்கு பேருந்தில் பயத்துக்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உயிரிழந்த குறித்த நபரை பரிசோதனைக்குட்படுத்திய வைத்தியர்கள் திடீரென அதிர்ச்சியடைந்துள்ளனர்.

எலி மற்றும் ஏனைய கொறித்துண்ணிகளால் பரவும் Hanta எனும் வைரஸினால் குறித்த நபர் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருப்பதை கண்டறிந்துள்ளனர்.

எனினும் இந்த வைரஸ் தொற்று எவ்வாறு பரவுகிறது என்பது தொடர்பில் இதுவரை கண்டறியப்படாத நிலையில் விஞ்ஞானிகள் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அத்துடன் குறித்த பேருந்தில் பயணித்த 32 பயணிகளுக்கும் பரவியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அவர்களையும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த மருத்துவர்கள் தீர்மானித்துள்ளனர்.

மேலும் இந்த வைரஸ் ஆனது பிரான்சின் நிவ்ஓர்லியன்ஸ் பகுதியிலும் பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து பிரான்சின் குறித்த பகுதியில் காணப்படுகின்ற அனைத்து உணவகங்கள், மதுபானசாலைகள், மற்றும் களியாட்ட விடுதிகளும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வைரஸினை பரவாமல் கட்டுப்படுத்த சீன மற்றும் பிரான்சின் சுகாதார துறை அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த வைரஸ தொற்றுக்கான அறிகுறிகளாக காய்ச்சல் மற்றும் தசை வலிகள், குறிப்பாக தொடைகள், இடுப்பு, முதுகு மற்றும் சில நேரங்களில் தோள்களில் வருத்தம் காணப்படகூடும்.

தலைவலி, தலைச்சுற்றல், உடல் குளிர்மை மற்றும் வயிற்றுப் பிரச்சினைகளையும் hanta வைரஸினால் பாதிக்கப்பட்டவர்கள் சந்திக்க நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளதோடு  4 முதல் 10 நாட்கள் வரை இருமல் மற்றும் மூச்சுத்திணறல் காணப்பட்டால் குறித்த வைரஸ் காணப்படுவதற்கான முழுமையான அறிகுறிகள் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

Sources : Hirunews

Back to top button