செய்திகள்

தண்ணீர் கேன் உற்பத்தியாளர்கள் பணி நிறுத்தம்: தாகத்தில் தவிக்கப் போகிறதா சென்னை? – கள நிலவரம்

தமிழகம் முழுவதும் ஆறாவது நாளாக கேன் குடிநீர் நிறுவனங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. சென்னை உயர்நீதிமன்றத்தில் கேன் குடிநீர் நிறுவனங்கள் நிலத்தடி நீரை உறிஞ்சுவதால், தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துவருகிறது என குற்றம்சாட்டும் பொதுநல வழக்கு பதிவானதைத் தொடர்ந்து இந்த வேலைநிறுத்தம் தொடங்கப்பட்டது.

சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் வீடுகளில், மட்டுமல்லாது மருத்துவமனை, வணிக வளாகங்கள், அலுவலகங்கள் என பல இடங்களில் கேன் குடிநீர் பயன்பாடு இருப்பதால், இந்த வேலைநிறுத்தம் கேன் குடிநீர் தட்டுப்பாட்டை ஏற்படுத்தும் என மக்கள் அஞ்சுகின்றனர்.

தாகத்தில் தவிக்கப்போகிறதா சென்னை? - தொடருக் குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் பணி நிறுத்தம்படத்தின் காப்புரிமைG ETTY IMAGES

கேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் வேலை நிறுத்தத்தால் கேன் தண்ணீரின் விலை அதிகரித்துள்ளது என பலரும் வேதனையில் உள்ளனர். சென்னையைச் சேர்ந்த இல்லத்தரசி நித்யா கேன் குடிநீருக்கு ரூ.50 தற்போது வசூலிக்கப்படுகிறது என்கிறார். ”20 லிட்டர் கேன் குடிநீர் ரூ.40க்கு விற்கப்பட்டு வந்தது. வேலை நிறுத்தத்தால், குடிநீர் கேன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது எனக்கூறி ரூ.50 கேட்கிறார்கள். மெட்ரோ நீரை நம்பி குடிக்கமுடியுமா என தெரியவில்லை. கேன் குடிநீர் பாதுகாப்பானதாக இருக்கும் என நம்புவதால், விலை அதிகரித்தாலும் வாங்குகிறோம்,”என்கிறார் நித்யா.

நீதிமன்ற ஆணையால் மூடப்பட்ட லைகள்

முன்னதாக, சென்னை உயர்நீதிமன்றத்தில், புழல் பகுதியைச் சேர்ந்த சிவமுத்து என்பவர் குடிநீர் ஆலைகளுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். நிலத்தடி நீரை எடுக்க குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்திடம் அனுமதி பெறவேண்டும். ஆனால், பல நிறுவனங்கள் அனுமதியின்றி செயல்படுகிறார்கள் என அவர் குற்றம்சாட்டினார். பல நூறு ஆலைகள் சட்டத்திற்கு புறம்பாக இயங்குன்றன என்றும் அந்த நிறுவனங்களை மூடவேண்டும் என்றும் கோரினார்.

20லிட்டர் குடிநீர் ரூ.50வரை விற்பனை: குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் என அச்சம்படத்தின் காப்புரிமை TWITTER

வழக்கை விசாரித்த நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆர்.சுரேஷ்குமார் ஆகியோர், தமிழகத்தில் நிலத்தடி நீரை எடுக்கும் நிறுவனங்கள் அரசின் அனுமதியுடன் செயல்படுகின்றனவா என்றும் விதிகளை மீறும் நிறுவனங்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் விரிவான அறிக்கையை தமிழக அரசு மார்ச் 3ம் தேதி அளிக்கவேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.

இந்த உத்தரவை அடுத்து, அரசு அதிகாரிகள் தீடீரென தமிழகம் முழுவதும் சுமார் 300 நிறுவனங்களுக்கு சீல் வைத்துள்ளனர் என்று தமிழ்நாடு அனைத்து அடைக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவிக்கிறது. இதன் காரணமாகவே தாங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தாகத்தில் தவிக்கப்போகிறதா சென்னை? - தொடருக் குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் பணி நிறுத்தம்படத்தின் காப்புரிமை GETTY IMAGES

தமிழ்நாடு அடைக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் முரளி பேசுகையில், நிலத்தடி நீரை உறிஞ்சி எடுக்கும் ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவால், பலரும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கிறார். ”பொதுமக்கள் தேவைக்காக மட்டுமே நீரை உறிஞ்சி எடுக்கிறோம். இதன்காரணமாவே இந்த வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளோம். மற்ற தேவைகளுக்கு எடுக்கப்படும் நிலத்தடி நீரையும், குடிநீருக்காக எடுக்கப்படும் நிலத்தடி நீரையும் ஒன்றுபோல பார்க்கக் கூடாது. பலரும் உரிமம் வைத்திருக்கிறோம். ஆனால் தடையின்மை சான்றிதழ் இல்லை. இதனால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளோம்,” என்கிறார்.

20லிட்டர் குடிநீர் ரூ.50வரை விற்பனை: குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் என அச்சம்படத்தின் காப்புரிமை TWITTER

தமிழகம் முழுவதும் சுமார் 1,600 நிறுவனங்கள் செயல்படுகின்றன. அதில் வெறும் 600 நிறுவனங்களுக்கு மட்டுமே தடையின்மை சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளதாக அடைக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியாளர்கள் ( கேன் வாட்டர்) சங்கத்தினர் கூறுகின்றனர். தடையின்மை சான்றிதழ் அளிப்பதற்கான விதிகளில் மாற்றம் வேண்டும் என்று அவர்கள் கோருகின்றனர். சென்னை நகரத்திற்கு மட்டும் தினமும் சுமார் மூன்று லட்சம் கேன்கள் விநியோகம் செய்யப்படுவதாக தனியார் குடிநீர் நிறுவனங்கள் கூறுகின்றன. பெரிய தொழிற்சாலைகள் நிலத்தடி நீரை மாசுபடுத்துகின்றன. அப்படி இருக்கும்போது, மக்களின் குடிநீர் தேவைக்காக நிலத்தடி நீர் எடுப்பதை, தண்ணீர் வளத்தைச் சுரண்டுவதாகப் பார்க்கக்கூடாது என்பது அவர்களின் வாதம்.

மக்கள் கேன் தண்ணீர் வாங்குவது சரியா?

20லிட்டர் குடிநீர் ரூ.50வரை விற்பனை: குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் என அச்சம்படத்தின் காப்புரிமை GETTY IMAGES

சராசரியாக, சென்னை நகரத்திற்கு ஒரு நாளைக்கு 850 மில்லியன் லிட்டர் தண்ணீரை சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியம் விநியோகம் செய்கிறது. தட்டுப்பாடு ஏற்படும்போது, வழங்கப்படும் அளவு குறையும். அதனால் தரமான குடிநீர் கிடைக்கும். இருந்தபோதும், கேன் வாட்டர் வாங்கும் பழக்கம் மக்களிடம் பரவியுள்ளது என்கிறார்கள் குடிநீர் வாரிய அதிகாரிகள்.

20லிட்டர் குடிநீர் ரூ.50வரை விற்பனை: குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் என அச்சம்படத்தின் காப்புரிமை GETTY IMAGES

கேன் தண்ணீர் சுத்தமானது என்றும், குடிநீர் வாரியம் மூலம் கிடைக்கும் தண்ணீர் குடிப்பதற்கு அல்லாத பயன்பாட்டிற்கு மக்கள் பயன்படுத்துவது வருத்தமனாது என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

கேன் தண்ணீரை வாங்குபவர்கள் தங்களது சுயவிருப்பத்தின் பேரில் வாங்குகிறார்கள் என்றும் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியம் மூலம் வீடுகளுக்கு நேரடியாக வழங்கப்படும் குடிநீர் தூய்மையானது, குடிப்பதற்கு உகந்தது என்றும் கூறுகிறார் வாரியத்தின் நிர்வாக இயக்குனர் பிரபு சங்கர்.

பிபிசி தமிழிடம் பேசிய பிரபு சங்கர், குடிநீர் வாரியம் மூலம் விநியோகம் செய்யப்படும் தண்ணீரில் இருந்து, ஒவ்வொரு நாளும் சுமார் 300 தண்ணீர் மாதிரிகள் சோதனை செய்யப்படுகின்றன என்றும் 20 மாதிரிகள் பாக்டீரியா தாக்கத்திற்காக சோதனைகள் செய்யப்படுகின்றன என்கிறார்.

20லிட்டர் குடிநீர் ரூ.50வரை விற்பனை: குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் என அச்சம்
படத்தின் காப்புரிமை TWITTER

”கேன் குடிநீரை விலை கொடுத்து மக்கள் வாங்குகிறார்கள். மெட்ரோ வாட்டர் மூலம் அளிக்கப்படும் தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு, குடிப்பதற்கு ஏற்ற முறையில் வழங்கப்படுகிறது. சென்னையில் ஐந்து இடங்களில் சுத்திகரிப்பு நிலையங்கள் செயல்படுகின்றன. அதோடு கடல்நீரை குடிநீராக்கும் ஆலைகளில் இருந்தும் சுத்திகரிக்கப்பட்ட நீரை விநியோகம் செய்கிறோம். தேவையான அளவில் குளோரின் சேர்க்கப்பட்டு, தூய்மையான நீரை வழங்குகிறோம். கடந்த பத்து ஆண்டுகளில்தான் மக்கள் கேன் குடிநீரை வாங்கி குடிக்க தொடங்கினர். முன்னர் எல்லா வீடுகளிலும், அலுவலகங்களிலும் மெட்ரோ வாட்டர் அளிக்கும் குடிநீர்தான் பயன்பாட்டில் இருந்தது. இப்போதுகூட, மெட்ரோ வாட்டர் தண்ணீரின் தரத்தை உணர்ந்தவர்கள் இதனை பயன்படுத்துகிறார்கள்,”என்கிறார் பிரபு சங்கர்.

கேன் தண்ணீர்தான் சுத்தமானது என்பது கற்பிதம் என கூறும் பிரபு சங்கர் ஒரு சில இடங்களில் தண்ணீரில் மாசுபாடு இருந்தால், புகார் வந்ததும் உடனடியாக குழாய் மூலம் வழங்கப்படும் தண்ணீரை நிறுத்தி, லாரி மூலம் சுத்தமான குடிநீர் வழங்கப்படுகிறது என்கிறார்.

Sources BBC

Back to top button