ஆன்மிகம்

Daily Horoscope : 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ.. இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (06.03.2020 )..!

06.03.2020 ஸ்ரீவிகாரி வருடம் மாசி மாதம் 22 ஆம் நாள் வெள்ளிக்கிழமை (Daily Horoscope For All Signs)

பஞ்சாங்கம்

நாள் வெள்ளிக்கிழமை
திதி ஏகாதசி காலை 7.40 வரை பிறகு துவாதசி
நட்சத்திரம் புனர்பூசம் காலை 6.48 வரை பிறகு பூசம்
யோகம் சித்தயோகம்
ராகுகாலம் காலை 10.30 முதல் 12 வரை
எமகண்டம் பகல் 3 முதல் 4.30 வரை
நல்லநேரம் காலை 9 முதல்10 வரை / மாலை 4.30 முதல் 5.30 வரை
சந்திராஷ்டமம் கேட்டை காலை 6.48 வரை பிறகு மூலம்
சூலம் மேற்கு
பரிகாரம் வெல்லம்

 

மேஷராசி அன்பர்களே!

அனுகூலமான நாள். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். திடீர் செலவு கள் ஏற்பட்டாலும், தேவையான பணம் இருப்பதால் சமாளித்துவிடுவீர்கள். வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சி தரும் செய்தி வந்து சேரும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிலருக்கு தாயின் தேவைகளை நிறைவேற்றி, அவருடைய ஆசிகளைப் பெறும் வாய்ப்பு உண்டாகும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்கள் வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் செலவுகள் ஏற்படக்கூடும்.

ரிஷபராசி அன்பர்களே!

உற்சாகமான நாளாக இருக்கும். சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். எதிர்பாராத பொருள்வரவுக்கு வாய்ப்பு உண்டு. அரசாங்கக் காரியங்கள் சற்று தாமதமாகத்தான் முடியும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளவேண்டாம். வாழ்க்கைத்துணைவழி உறவுகளிடம் எதிர்பார்த்த காரியம் நல்லபடி முடியும். தந்தைவழி உறவுகளால் செலவுகள் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. வியாபாரத்தில் பணியாளர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படக்கூடும்.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் நலனில் கவனமாக இருப்பது அவசியம்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும்.

மிதுனராசி அன்பர்களே!

இன்று எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். சகோதர வகையில் செலவுகள் ஏற்படக்கூடும் என்றாலும், அதனால் மகிழ்ச்சியே ஏற்படும். அரசாங்க வகையில் எதிர்பார்க்கும் காரியம் அனுகூலமாக முடியும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். அலுவலகத்தில் சக ஊழியர்களால் ஆதாயம் கிடைக்கும். நீண்டநாளாக எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களிடம் வீண் விவாதம் செய்வதை தவிர்ப்பது நல்லது.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சகோதரர்களை அனுசரித்துச் செல்வது அவசியம்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களின் சந்திப்பால் மகிழ்ச்சியும் ஆதாயமும் உண்டாகும்.

கடகராசி அன்பர்களே!

மகிழ்ச்சி தரும் நாளாக இருக்கும். தேவையான பணம் கையில் இருக்கும். இளைய சகோதரர் கேட்கும் உதவியை மகிழ்ச்சியுடன் செய்து தருவீர்கள். தந்தையிடம் எதிர் பார்த்த உதவி கிடைக்கும். சிலருக்கு முக்கிய பிரமுகர்களின் அறிமுகமும் அவர்களால் தொடர் ஆதாயமும் கிடைக்கும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். அலுவலகத்தில் அதிகாரியின் பாராட்டுகள் மனதுக்கு உற்சாகம் தரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பங்குதாரர்களால் ஆதாயம் கிடைக்கும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பொருள் சேர்க்கை உண்டாகும்.

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப்பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு உண்டாகும்.

சிம்மராசி அன்பர்களே!

மனதில் இனம் தெரியாத உற்சாகம் பெருக்கெடுக்கும். ஆனாலும், புதிய முயற்சிகளை இன்றைக்குத் தவிர்ப்பது நல்லது. திடீர் செலவுகளால் கையிருப்பு கரைவதுடன் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலையும் ஏற்படும். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் சிறுசிறு சங்கடங்கள் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சக பணியாளர்கள் உங்கள் பணிகளில் உதவி செய்வார்கள். சலுகைகள் இழுபறிக்குப் பிறகு கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் கிடைத்தாலும் செலவுகளும் அதிகரிக்கும்.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாயின் தேவையை நிறைவேற்றுவதற்காக செலவு செய்யவேண்டி வரும்.

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் செலவுகள் ஏற்படும்.

கன்னிராசி அன்பர்களே!

அரசாங்க அதிகாரிகளால் காரிய அனுகூலம் உண்டாகும். தந்தைவழி உறவுகளால் பணவரவுக்கு வாய்ப்பு ஏற்படும். முக்கிய முடிவுகளை பிற்பகலுக்கு மேல் மேற்கொள் வது சாதகமாக முடியும். தொலைதூரத்திலிருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று வந்து சேரக் கூடும். நண்பர்களால் செலவுகள் ஏற்படும். அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. வியாபாரம் வழக்கம்போலவே நடைபெறும். பணியாளர்களின் ஒத்துழைப்பு சுமாராகத் தான் இருக்கும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை மூலம் எதிர்பாராத பொருள் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு.

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர்ப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தைவழி உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.

துலாராசி அன்பர்களே!

உற்சாகமான நாள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். உங்கள் முயற்சி களுக்கு சகோதரர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். தந்தை வழியில் திடீர் செலவுகள் ஏற்படக்கூடும். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். மாலையில் குடும்பத்துடன் வெளியிடங் களுக்குச் சென்று வருவீர்கள். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்ததை விட கூடுதலாகக் கிடைக்கும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முக்கிய பிரமுகர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய முயற்சிகள் அனுகூலமாக முடியும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு விருந்தினர் வருகை மகிழ்ச்சி தருவதாக அமையும்.

விருச்சிகராசி அன்பர்களே!

வீண் அலைச்சலைத் தவிர்க்கவும். மற்றவர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பேசும்போது கவனமாக இருக்கவும். காரியங்களில் சிறுசிறு தடைகள் ஏற்பட்டாலும் சாதகமாக முடியும். தந்தையுடன் மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பேச்சில் நிதானம் தேவை. சிலருக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களால் பிரச்னைகள் ஏற்படக் கூடும். பொறுமை தேவை.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர்ப் பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்கவும்.

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும்.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் வீண் விவாதத்தில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.

தனுசுராசி அன்பர்களே!

புதிய முயற்சிகளில் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து ஈடுபடவும். வெளியூர்ப் பயணம் தவிர்க்கவும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களால் சிறு சிறு சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். நண்பர்களிடம் எதிர்பார்த்த பணம் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். உறவினர்களால் குடும்பத்தில் சிறுசிறு சலசலப்புகள் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சக ஊழியர்களிடம் உங்கள் பணிகளை ஒப்படைக்காமல் நீங்களே செய்வது நல்லது. வியாபா ரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும்.

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மனதில் தேவையற்ற சஞ்சலம் ஏற்பட்டு நீங்கும்.

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூரிலிருந்து எதிர்பார்க்கும் செய்தி கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணையின் உடல் நலனில் கவனம் செலுத்தவும்.

மகரராசி அன்பர்களே!

எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும். சிலருக்கு குடும்ப விஷயமாக பயணம் மேற்கொள்ள நேரிடும். மாலைவேளையில் உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும். வாழ்க்கைத்துணைவழி உறவுகளுக்காக செலவு செய்யவேண்டி வரும். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த கருத்துவேறுபாடு நீங்கும். அலுவலகத்தைப் பொறுத்தவரை உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். அதிகாரிகள் அனுசரணையாக இருப்பார்கள். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் வருகையால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.

கும்பராசி அன்பர்களே!

பிற்பகலுக்குமேல் அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சகோதரர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். மாலையில் குடும்பத்துடன் உறவினர் வீட்டு விசேஷத்தில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரம் பிற்பகலுக்குமேல் விறுவிறுப்பாக நடக்கும். லாபமும் கூடுதலாகக் கிடைக்கும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் தேவையற்ற செலவுகள் ஏற்படும்.

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடைகளை வாங்கும் யோகம் உண்டாகும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

மீனராசி அன்பர்களே!

எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். பிள்ளைகள் வழியில் எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். வெளியூர்ப் பயணங்களையும், வெளியிடங்களில் சாப்பிடுவதையும் தவிர்ப்பது நல்லது. உறவினர்கள் வருகையால் சிற்சில சங்கடங்களைச் சமாளிக்கவேண்டி வரும். மாலையில் நண்பர்களைச் சந்தித்து மகிழும் சந்தர்ப்பம் ஏற்படும். அவர்களால் ஆதாயம் கிடைப்ப தற்கான வாய்ப்பு ஏற்படும். அலுவலகப் பணிகளில் கூடுதல் கவனம் தேவைப்படும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பணவரவுக்கும் எதிர்பாராத செலவுகளுக்கும் வாய்ப்பு ஏற்படும்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருப்பது அவசியம்.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வீட்டில் காணாமல் போய் தேடிய பொருள் கிடைக்கும்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு: டெல்லியில் இரு பள்ளிகள் மூடல் – கடற்படை நிகழ்வு ரத்து

ஏழரை சனி முடிய கண்டச்சனி, அஷ்டம சனி என அடுத்தடுத்து வருடக்கணக்கில் ஆட்டி படைக்க போகும் 2020 இன் சனி பெயர்ச்சி! யாருக்கெல்லாம் ஆபத்து?

தண்ணீர் கேன் உற்பத்தியாளர்கள் பணி நிறுத்தம்: தாகத்தில் தவிக்கப் போகிறதா சென்னை? – கள நிலவரம்

Back to top button