செய்திகள்

நாட்டில் நேற்று 502 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம்!

நாட்டில் நேற்றைய தினம் மொத்தமாக 502 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனால் இலங்கையில் அடையாளம் காணப்பட்ட மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையானது 21,469 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட அனைத்து கொரோனா நோயாளர்களும் மினுவாங்கொடை-பேலியகொட கொத்தணிப் பரவலுடன் தொடர்புடையவர்கள் ஆவர் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஒக்டோபர் 4, நாட்டின் இரண்டாவது கொரோனா அலையினைத் தொடர்ந்து 17,938 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தற்போது 11 வெளிநாட்டினர் உட்பட மொத்தமாக 5,926 கொரோனா நோயாளர்கள் நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலை மற்றும் சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இது இவ்வாறிருக்க நேற்று 485 கோவிட் -19 நோயாளிகள் குணமடைந்து வைத்தயசாலைகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அதேநேரம் கொரோனா தொற்று சந்தேகத்தின் பேரில் 577 பேர் வைத்தியக் கண்காணிப்பில் உள்ளதுடன், மொத்தமாக 96 உயிரிழப்பு சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

Back to top button