செய்திகள்

“நாம் வரும் வரை வீட்டில் இருங்கள்” – வேலைத்திட்டம் ஆரம்பம்

கூட்டுறவு சங்கத்தினால் ‘நாம் வரும் வரை வீட்டில் இருங்கள் ‘ என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட உலர் உணவு பொருட்களை வீட்டுக்கு வீடு சென்று விற்பனை செய்யும் வேலைத்திட்டம் மேல் மாகாணத்தில் புதன்கிழமை ஆரம்பிக்கப்பட்டது.

இந்த வேலைத்திட்டத்தின் கீழ் 500 – 1000 ரூபா பெறுமதியுடைய உலர் உணவு பொருட்கள் உள்ளடங்கிய பொதிகள் பொது மக்களுக்கு வழங்கப்படுவதுடன் தேவையான பொருட்கள் அடங்கிய பொதி தொலைபேசியின் மூலம் அறிவிப்பதனூடாக வீடுகளுக்குக் கொண்டு வருவதற்கான நடைமுறையொன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

பிரதேச செயலாளர் மூலம் கிராம உத்தியோகத்தர்கள் ஊடாக இந்த வேலைத்திட்டத்தை வலுவுடன் முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த வேலைத்திட்டம் மேல் மாகாணத்திலுள்ள 38 பல்நோக்கு கூட்டுறவு சங்கங்களுக்குள் நடைமுறைப்படுத்தப்படுவதாக மேல் மாகாண ஆளுனர் தெரிவித்துள்ளார்.

Back to top button