பல அத்தியாவசியப் பொருட்களுக்கு அதிரடி விலை குறைப்பு!
பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதி வரியை இன்று நள்ளிரவு முதல் நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவை கருத்திற் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ள ஜனாதிபதி ஊடகப் பிரிவு, டின் மீன், பருப்பு, பெரிய வெங்காயம் மற்றும் சீனி ஆகியவற்றுக்கான விலைகளை குறைத்துள்ளது.
அதன்படி இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் பெரிய டின் மீன் ஒன்று 200 ரூபாவிற்கும் பெரிய வெங்காயம் ஒரு கிலோகிராம் 100 ரூபாவிற்கும், சீனி ஒரு கிலோகிராம் 85 ரூபாவிற்கும் பருப்பு ஒரு கிலோகிராம் 150 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்பட வேண்டும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர ச.தொ.ச விற்பனை நிலையங்களில் தேங்காயை சாதாரண விலையில் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.