பழைய சீலை உடுத்தினாலும் சும்மா உலக அழகி போல இருப்பா… புல்லரிக்க வைத்த யாழ் இளைஞர்! வைரலாகும் காணொளி
இலங்கையில் நடந்த யுத்தம் என்றும் யாராலும் மறக்க முடியாத கரைப்படிந்த வரலாறு. என்ன தான் யுத்த சூழல் இருந்தாலும் தமிழ் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் அவர்கள் கையாண்ட விதமே வேறு.
இலங்கையில் இன்று வாழ்பவரை விட அனைத்தையும் பிரிந்து வெளிநாடுகளில் குடும்பத்திற்காக உழைக்கும் உறவுகளுக்குதான் தெரியும் அதன் அருமை என்ன வென்று.
புதுவருடத்தில் அன்றைய காலத்தில் கற்று கொண்ட அனுபவங்களே வேறு. இன்பம், துன்பம், மகிழ்ச்சி, கவலை, வியப்பு என்று பலதரப்பட்ட அனுபவங்கள் கொண்டது தான் வாழ்க்கை என்பதை உணர்த்துவது போல இருக்கும்.
தமிழ்ப் புதுவருடத்தன்று கை விசேடம், கை நீட்டம் என்று ஒரு வழக்கம் பின்பற்றப்படுகிறது. அன்றைய நாளில் வாங்கும் பணத்தை சேர்த்து மறு நாள் புத்தாடை வாங்கி அணியும் நிலையும் இருந்தன.
இன்று வெளிநாட்டு காலச்சாரம் மெதுவாக ஊடுறுவி எம் தனித்துவத்தை அழித்து கொண்டிருக்கின்றது. ஆனால், இதை எல்லா மீண்டும் பார்க்க மாட்டோமா என்ற ஏக்கத்துடன் புலம் பெயர்ந்து வெளிநாட்டில் வேலைக்காக சென்ற எத்தனையோ இளைஞர்கள் ஏங்கிக் கொண்டிருக்கின்றார்கள்.
யாழ் இளைஞர் ஒருவர் இதனை கவிதையாகவே கூறியுள்ளார். ஒரு முறை கேட்டுப்பாருங்கள் புல்லரித்து விடும்.