செய்திகள்

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பாக எட்டப்பட்டுள்ள முக்கிய முடிவுகள்

நாடு முகங்கொடுத்துள்ள கொரோனா அச்சுறுத்தல் நிலைமையின் காரணமாக, பாடசாலைகளை மீள ஆரம்பித்தல் தொடர்பான முக்கிய கலந்துரையாடல் ஒன்று நேற்றைதினம்(06.11.2020) நடைபெற்றுள்ளது.

கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் அனைத்து மாகாண, வலைய மற்றும் கோட்டக் கல்வி அதிகாரிகளுக்கிடையிலேயே இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இதன்போது பாடசாலைகளில் 50 சதவீத மாணவர்களை பாடசாலைகளுக்கு வரவழைத்து நேரமாற்றம் இன்றி, சமூக இடைவெளி உள்ளிட்ட சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றி கல்வி செயற்பாடுகளை மேற்கொள்வது குறித்த யோசனை முன்வைக்கப்பட்டது.

எனினும் இது தொடர்பான இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என தெரியவந்துள்ளது.

அரச பாடசாலைகளில் நவம்பர் 9ம் திகதி முதல் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த போதும், கொரோனாவின் 2ம் அலை பரவல் காரணமாக 2 வாரங்களுக்கு இந்த நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

 

எவ்வாறாயினும் மாணவர்கள், ஆசிரியர்களின் பாதுகாப்பு கவனத்தில் கொள்ளப்படுமென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Back to top button