செய்திகள்

ஊரடங்கின் போது அத்தியாவசிய தேவை ஏற்படுகிறதா ? ஜனாதிபதி வழங்கியுள்ள அறிவுரை !

ஊரடங்கு அமுலாக்கப்பட்டுள்ள காலப்பகுதயில் அவசிய தேவை காணப்படுமாயின் ஒருவருக்கு அனுமதி வழங்கப்படும் என்று ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.

ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய தேவைகள் ஏற்படுகின்றபோது அச்சமயத்தில் எவ்விதமான நடைமுறைகளை பின்பற்றுதல் வேண்டும் என்பது தொடர்பில் பொதுமக்கள் பலரும் கேள்வி எழுப்பியிருந்த நிலையிலேயே ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தனது டுவிட்டர் பதிவின் ஊடாக பதிலளித்துள்ளார்.

ஊரடங்கின் போது அத்தியாவசிய தேவை ஏற்படுகிறதா ? ஜனாதிபதி வழங்கியுள்ள அறிவுரை ! 1

அவரது டுவிட்டர் பக்கத்தில் இன்று அதிகாலையில் பதிவிட்டுள்ள டுவிட்டர் பதிவில், தேவைகளுக்காக வீட்டில் ஒருவர் மாத்திரம் வெளியில் செல்லுங்கள். செல்லும்போது முகக்கவசத்தினை கட்டாயம் அணியுங்கள்.

பொது இடங்களிலும் கடைகளிலும் அடுத்தவரில் இருந்து ஒருமீற்றர் தூரம் இடைவெளியை பேணுங்கள்.  உங்கள் முகத்தினை தொடாதீர்கள். கைகளை எப்போதும் கழுவுங்கள். வீடு திரும்பியதும் குளியுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

Back to top button