ஏனையவை

பிச்சை போட்டு தான் உனக்கு டைட்டில் வேணுமா?.. தர்ஷனை அவமதித்து கண்கலங்க வைத்த வனிதா.. பரபரப்பாகும் பிக்பாஸ் வீடு.!

பிக்பாஸ் வீட்டில் இருந்து நேற்று சாக்‌ஷி வெளியேறிய நிலையில், இன்று வெளியான ப்ரோமோவில் வனிதா அதிரடியாக பிக்பாஸ் வீட்டில் நுழைந்துள்ளார். இதைத்தொடர்ந்து வனிதா கஸ்தூரி, கவின் என அனைவரையும் அவமதித்து பேசி வந்தார்.

இந்நிலையில் வனிதா சற்றுமுன் வெளியான கடைசி ப்ரோமோவில், சேரனைக் காட்டி டைட்டிலை தூக்கி உங்க கையில் கொடுத்த மாதிரியும், நீங்க தூக்கி இவரு கையில கொடுத்த மாறியும் இருந்தா, இவங்கெல்லாம் பிச்சை போட்ட தான் உனக்கு பிக்பாஸ் டைட்டில் வேணுமா? என்று கேட்டுள்ளார். அதற்கு தர்ஷன் முகம் சோகமாக காணப்பட்டு வேண்டாம் என்று சொல்கிறார்.மேலும், இது வந்து சிம்பதி ஷோ இல்லை, டைட்டிலை விட்டுகொடுத்துட்டு போரதுணா வீட்டுக்கு கிளம்புங்க என்று அனைத்து போட்டியாளர்களை கடுமையாக பேசியுள்ளார். இவர் பேசியதை கேட்டு தர்ஷன் கோபத்துடன், கண்கலங்கி காணப்பட்டார்.. அதிகபட்சமாக இன்று ஒருநாள் மட்டுமே வனிதா பிக்பாஸ் வீட்டில் தங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Back to top button