புதன் வக்ர பெயர்ச்சி பலன்.. இனி இந்த ராசியினர்களுக்கு பொற்காலம் தான்!
ஜோதிடத்தின் படி கிரகங்களின் பெயர்ச்சியானது தலைகீழ் இயக்கத்தின் தாக்கம் 12 ராசியிலும் காணப்படும்.
செல்வம், புத்திசாலித்தனம், வியாபாரம் போன்றவற்றுக்கு காரணமானக இருப்பவர் புதன் கிரகம்.
இதனிடையே, மே 10 ஆம் தேதி ரிஷப ராசியில் வக்ர நிலையில் புதன் கிரகம் பயணிக்க ஆரம்பித்துள்ளார்.
மேலும் ஜூன் 3-ம் தேதி வக்ர நிவர்த்தியாகி முற்போக்கு நிலையில் மாறி பயணிப்பார். இந்த மாற்றங்கள் 12 ராசிக்காரர்களுக்கும் நல்ல பலனையும், தீய விளைவுகளையும் ஏற்படுத்தி தரும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்கு புதனின் வக்ர பெயர்ச்சி அற்புத பலன்களைத் தருவார். புதிய வேலை, பதவி உயர்வு கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும்.
பெரிய சாதனைகளை அடைய முடியும். மரியாதை அதிகரிக்கும்.
கடகம்
கடக ராசிக்கு புதனின் வக்ர பெயர்ச்சி வருமானத்தை அதிகரிக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.
மேலும், பணம் வரவு உங்களுக்கு சாதகமாக அமையும். உங்கள் வெற்றியில் முக்கிய பங்கு வகிப்பவர்களுடனான உறவுகள் சிறப்பாக இருக்கும்.
மீனம்
மீன ராசிக்கு புதன் வக்ர பெயர்ச்சியானது பல வகைகளில் நன்மை தரும். தொழில்-வியாபாரத்தில் லாபம் உண்டாகும்.
முதலீடு சாதகமாக இருக்கும். மொத்தத்தில், இந்த நேரம் உங்களுக்கு நிதி பலம் தரும்.