செய்திகள்
வங்கிச் சேவை அத்தியாவசிய சேவையாகப் பிரகடனப்படுத்தினார் ஜனாதிபதி
வங்கிச் சேவையை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இன்று புதன்கிழமை மாலை ஜனாதிபதியால் இந்த அறிவித்தல் வெளியிடப்பட்டது.
அதற்கமைய, நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள போதிலும் வங்கிகள் சேவையில் ஈடுபட வேண்டும் என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச பணிப்புரை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.