மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளைத் தவிர நாட்டின் அனைத்து பாடசாலைகளிலும் தரம் 1-5 வரையான மாணவர்களுக்கான கற்றல் மற்றும் கற்பித்தல் நடவடிக்கையானது ஜனவரி 11 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.
அதேபோன்று முன்பள்ளி மாணவர்களுக்கான கற்றல் மற்றும் கற்பித்தல் செயற்பாடுளும் ஜனவரி 11 ஆம் திகதி ஆரம்பமாகும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இன்று காலை கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.




