போட்டியிலிருந்து வெளியேறினாலும் கவினுக்கு பிக்பாஸ் கொடுத்த விருது… மற்றவர்களுக்கு என்னென்ன விருது தெரியுமா?
இன்றுடன் நிறைவடையும் பிக்பாஸ் சீசன் 3-ன் வெற்றியாளர் முகேன் என்று அனைவருக்கும் தெரிந்துவிட்டது. இருந்தாலும் அதிகாரப்பூர்வமாக இன்று மாலை ஆரம்பமாகும் நிகழ்ச்சியில் தெரிந்துவிடும்.
இந்த சீசனில் மலேசியாவை சேர்ந்த ஒருவரும், இலங்கையைச் சேர்ந்த ஒருவரும் தமிழகத்தை சேர்ந்த ஒருவரும், கர்நாடகத்தை சேர்ந்த ஒருவர் என்று அணைத்து மக்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
இன்று துவங்கவிருக்கும் முடிவு கொண்டாட்டத்தில் வெற்றியாளருக்கு கொடுக்கவிருக்கும் விருதினை இன்று வெளியான ப்ரொமோ காட்சியில் அவதானித்தோம்.
தற்போது வெற்றியாளருக்கு மட்டுமின்றி வீட்டில் இருந்த சில போட்டியாளர்களுக்கும் விருதுகள் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதில் கவினுக்கு – Game changer (ஆட்டத்தையே மாற்றியமைப்பவன்), வனிதா – Guts And Grit (தைரியமானவள்), சேரன் – ஒழுக்கமானவர், சாண்டி – தோழர், தர்ஷன் – சகலகலா வல்லவன் என்று விருதுகள் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.