செய்திகள்

வாடகை தேவையில்லை வைரசிற்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்களிற்கு வீடுகள் வழங்கப்படும் – இந்தியாவில் ஒரு முன்னுதாரணம்

கொரோனா வைரசிற்கு எதிரான போராட்டத்தில் முன்னரங்கில் உள்ள மருத்துவர்களும் தாதிமார்களும் இந்தியாவில்  அச்சுறுத்தல்களையும் துன்புறுத்தல்களையும் சந்தித்து வரும் வேளையில் கொல்கத்தாவில் மாணவியொருவர் மருத்துவ  பணியாளர்கள் தங்கியிருப்பதற்கு இரண்டு வீடுகளை இலவசமாக வழங்க முன்வந்துள்ளார்.

கொவிட் 19 நோயாளிகளிற்கு சிகிச்சை அளிக்கும் பணியில் உள்ளவர்கள் துன்புறுத்தலிற்கு உள்ளாவதை அறிந்து நான் மனவேதனை அடைந்தேன் என அவர் தெரிவித்துள்ளார்.

வர்த்தகரான எனது தந்தை இரண்டு வீடுகளை ஆறு மாதங்களிற்கு முன்னர் வாடகைக்கு வழங்கியிருந்தார்,நான் அவரிடம் இருக்கஇடமில்லாமல் அவதிப்படும் மருத்துவர்கள் தாதிமார்களிற்கு அதனை வழங்கமுடியுமா என கேட்டேன் என சுச்சனா சகா தெரிவித்துள்ளார்.

வைரசிற்கு எதிரான போராட்டத்திற்கு இது எங்களது சிறிய பங்களிப்பாக அமையும் வாடகை தேவையில்லை என நான் தந்தையிடம் தெரிவித்தேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்,

எனது தந்தை இதனை உடனடியாக ஏற்றுக்கொண்டார் ஆனால் அவர் அந்த இரண்டு வீடுகளையும் கொரோனா வைரஸ் நோயாளிகளை பராமரிக்கும் இடம்பெயர்ந்த மருத்துவர்கள் தாதிமார்களிற்கே வழங்கவேண்டும் என நிபந்தனை விதித்தார் என என சுச்சனா சகா தெரிவித்துள்ளார்.

எனது மகள் இதனை தெரிவித்ததும் இந்த விடயங்களை கையாள்பவர்களை தொடர்புகொண்டு நான் விசாரித்தவேளை அவர்கள் இதனால் எந்த பிரச்சினையுமில்லை என தெரிவித்தனர் என  சுச்சனா சகாவின் தந்தை  தெரிவித்துள்ளார்.

Back to top button