செய்திகள்

இந்த வார ராசி பலன்கள் (29-03-2019 முதல் 04-04-2019 வரை) : எந்த ராசிக்கு நன்மை?

இந்த வாரம் (29-03-2019 முதல் 04-04-2019 வரை) மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்களையும் பரிகாரங்களையும் பார்க்கலாம்.
மேஷம்
சூரியன் உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் பெரியவர்களுக்கு பரிசுப் பொருட்கள் வாங்கி கொடுப்பீர்கள், அப்பாவுக்கு வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். அரசு நிறுவனங்களில் முதலீடுகள் அதிகரிக்கும். செவ்வாய் இரண்டாமிடத்தில் இருப்பதால் வீண் பேச்சினை தவிர்க்கவும்.
புதன், சுக்கிரன் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் இருப்பதால் ஆடம்பர செலவுகள் அதிகரிக்கும். பணம் வரும் வாய்ப்பு அதிகரிக்கும். குரு உங்கள் ராசிக்கு ஒன்பதால் இடத்தில் இருக்கிறார் எதிர்பாராத வகையில் பண வரவு உண்டாகும், பணம் அதிகமாக மிச்சமாகும், செய்யும் தொழிலில் லாபம் அதிகரிக்கும். சனி உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் அப்பா செய்து கொண்டிருக்கும் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும், தொழிலுக்காக வெளிநாடு செல்லும் அதிர்ஷ்டம் உண்டாகும்.
ராகு மூன்றாமிடத்தில் இருக்கிறார் மனதில் குழப்பம் உண்டாகும் நீண்ட முயற்சிக்குப் பின்னர் செய் தொழிலில் வெற்றி கிடைக்கும். கேது உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் அலைச்சல் அதிகரிக்கும்.
ஆன்மீக பயணங்கள் மனதில் அமைதியை ஏற்படுத்தும். மாணவர்களின் கல்வி நிலை உயரும் பெண்களுக்கு வீட்டிலும் வெளியிடத்தில் அந்தஸ்து உயரும். வெள்ளிக்கிழமையன்று அம்மன் கோவிலுக்கு சென்று விளக்கு போடுங்கள்.
ரிஷபம்
சூரியன் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் தனியார் மற்றும் அரசாங்க ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அதிகரிக்கும், வீட்டு வாடகை மூலம் பண வரவு உண்டாகும். உயர் அதிகாரிகளின் உதவி கிடைக்கும். செவ்வாய் உங்கள் ராசியில் இருக்கிறார் பேச்சில் கோபத்தை குறைத்துக்கொள்ளவும். உடலில் உஷ்ணம் அதிகரிக்கும்.
புதன், சுக்கிரன் பத்தாம் இடத்தில் சஞ்சரிக்கின்றனர் தரகு கமிஷன் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும், குடும்ப வருமானம் அதிகரிக்கும். செய்யும் செயல்கள் சிறப்படையும். குரு உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் இருப்பதால் பண வருமானம் அதிகரிக்கும் வண்டி வாகனங்களில் கவனமாக செல்லவும். சனி உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் உத்தியோகத்தில் சிரத்தை தேவை, செய் தொழிலில் விரக்தி உண்டாகும்.
ராகு உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் வங்கியில் சேமிப்பு அதிகரிக்கும். கேது உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் எதிர்பாராத வகையில் பண வரவு அதிகரிக்கும். அஷ்டமத்து சனி நடப்பதால் சுப விரைய செலவுகள் தேடி வரும். தொழில் தொடங்க வேண்டாம்.
வண்டி வாகனத்தில் கவனமாக செல்ல வேண்டும் வீடு பூமி யோகம் உண்டாகும் இரண்டில் உள்ள ராகுவை அதிசாரத்தில் செல்லும் குருவும் சனீஸ்வரன் பார்ப்பதால் வாக்கில் கவனம் தேவை. கோபத்தை தவிர்க்க வேண்டும். மாணவர்களின் கவனத்தை படிப்பில் செலுத்தவும். பெண்களுக்கு உடலில் அசதி ஏற்படும். பெருமாள் கோவிலுக்கு சென்று புதன்கிழமைகளில் விளக்கு போடுங்கள் நன்மை ஏற்படும்.
மிதுனம்
சூரியன் தொழில் ஸ்தானமான பத்தாமிடத்தில் இருக்கிறார் நன்மைகள் அதிகரிக்கும் தொழிலில் வெற்றி உண்டாகும். சிலருக்கு அரசு வேலைகள் கிடைக்கும். மற்றவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். செல்வம், செல்வாக்கு புகழ் கூடும். சந்திரன் சஞ்சாரம் இந்த வாரம் மத்தியில் சாதகமாக இல்லை.
மனதில் குழப்பம் ஏற்படும். செவ்வாய் விரைய ஸ்தானத்தில் இருக்கிறார் வங்கி சேமிப்பு உயரும். வீடு நிலம் வகையில் முதலீடு செய்யலாம். குரு உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் இருந்து அதிசாரமாக ஏழாம் வீட்டிற்கு பெயர்ச்சி அடைந்துள்ளதால் தம்பதியரிடையே நெருக்கம் அதிகரிக்கும். புதன் சுக்கிரன் ஒன்பதாம் இடத்தில் இருப்பதால் மனைவியினால் நன்மை உண்டாகும்.
சனி உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் குரு, கேது உடன் இருக்கிறார் வியாபாரம் விருத்தியாகும், வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீட்டில் லட்சுமி கடாட்சம் யோகமும் கிடைக்கும். ராசியை குரு பார்ப்பதால் சுபிட்சம் கிடைக்கும் திருமணம் புத்திர பாக்கியமும் பதவி உயர்வு தருவார்கள் ராகு உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் குழப்பம் உண்டாகும்.
கேது உங்கள் ராசிக்கு ஏழாம் இடத்தில் இருக்கிறார் நண்பர்களின் உதவி கிடைக்கும். மாணவர்களின் கல்வி நிலை உயரும் பெண்களுக்கு புது வேலை வாய்ப்பு அமையும். புதன்கிழமைகளில் பெருமாள் கோவிலுக்கு செல்லவும்.
கடகம்
சூரியன் ஒன்பதாமிடத்தில் இருப்பதால் தொழில் சம்பந்தமாக வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். சந்திரன் சஞ்சாரம் வார இறுதியில் சாதகமாக இல்லை என்பதால் கவனம் தேவை. செவ்வாய் பத்தாமிடத்தில் இருக்கிறார் எல்லா செயல்களும் சிறப்படையும், வேலையில் சுறுசுறுப்பு உண்டாகும். குரு பகவானும் கேதுவும் இணைந்து ஆறாம் வீட்டில் உள்ளதால் மாணவர்கள் கல்வியில் மேன்மை அடைவார்கள்.
முன்கோபத்தை தவிர்க்க வேண்டும். வாகனத்தில் கவனமாக செல்ல வேண்டும் மனைவி சொல்வதை கணவர் கேட்க வேண்டும். வேலை வாய்ப்பில் பதவி உயர்வு கிடைக்கும். சுக்கிரன் எட்டாம் வீட்டில் புதனுடன் இருப்பதால் பொன் நகைகளை யாருக்கும் இரவல் கொடுக்க வேண்டாம்.
வருமானம் வருவதை யாரிடமும் சொல்லக்கூடாது. ஜாமீன் கையெழுத்து போடக்கூடாது. சனி உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் உடலில் வலி உண்டாகும், சோம்பல் உண்டாகும். கடன்கள் அடைபடும்.
நோய்கள் சிலருக்கு எட்டிப்பார்க்கும். ராகு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் அலைச்சல் அதிகரிக்கும். கேது உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் மருத்துவ செலவுகள் ஏற்படும். தானம் தர்மம் செய்யவும் ஏழைக் குழந்தைகளுக்கு உணவு உடை வாங்கித் தரவும்
சிம்மம்
உங்கள் ராசிநாதன் சூரியன் உங்கள் ஜென்ம ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் வீண் செலவுகள் உண்டாகும். அலுவலகத்தில் வேலையில் மனம் ஈடுபாடு இருக்காது. செவ்வாய் பத்தாம் வீட்டில் இருப்பதால் தொழில் நிலையில் மேன்மை நிலை உருவாகும். புதன் எட்டாமிடத்தில் இருக்கிறார் தாய் மாமனுடன் சச்சரவு உண்டாகும், குரு நான்காம் இடத்தில் இருந்து அதிசாரமாக ஐந்தாம் வீட்டில் அமர்ந்திருப்பதால் வீடு மாறும் சூழ்நிலை உண்டாகும். சிறு பயணங்களால் நன்மை உண்டாகும்.
கணவன் மனைவி இடையே விட்டுக்கொடுத்து செல்லவும் முன்கோபத்தைத் தவிர்க்கவும். உங்கள் ராசிநாதன் சுக்கிரன் ஏழாம் வீட்டில் இருப்பதால் கணவன் மனைவி நெருக்கம் அதிகரிக்கும். பெண்களால் நன்மை உண்டாகும்.
சனி உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் கலைகளில் ஆர்வம் அதிகரிக்கும். உறவினர் வீட்டு விஷேசங்களில் கலந்து கொள்வீர்கள். ராகு பதினொன்றாம் இடத்தில் இருக்கிறார் எண்ணங்கள் எல்லாம் நிறைவேறும்.
கேது உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் குல தெய்வக் கோயிலுக்கு செல்வீர்கள். மாணவர்களுக்கு படிப்பில் கவனம் தேவை. பெண்களுக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். செவ்வாய்கிழமைகளில் ராகுகாலத்தில் துர்க்கையை வணங்க நன்மைகள் நடைபெறும்.
கன்னி
சூரியன் உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் அமர்ந்து சம சப்தம பார்வையாக பார்க்கிறார். அரசு வேலைக்காக வெளியூர் செல்லும் நிலை உண்டாகும், அரசாங்கத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத் தொழில் சிறப்படையும். சந்திரன் சஞ்சாரம் சாதகமாக உள்ளது.
மனதில் நிம்மதி குடியேறும். செவ்வாய் ஒன்பதாம் இடத்தில் தொழில் நிறுவனத்தில் புதிய இயந்திரங்கள் வாங்குவீர்கள். புதன் ஆறாம் வீட்டில் சுக்கிரனுடன் இருப்பதால் பங்கு வர்த்தக முதலீடுகளில் கவனம் தேவை. பெண் எதிரிகளால் தொல்லை உண்டாகும்.
குடும்பத்தில் லட்சுமி கடாட்ச யோகம் உண்டாகும். வண்டி வாகனம் வாங்கும் போதும் தாயார் மனைவி பெயருக்கு வாங்க வேண்டும். சனி உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் வண்டி வாகனங்களை சரி செய்து கொள்ளுங்கள்.
ராகு உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் எல்லா முயற்சிகளும் வெற்றியடையும். கேது உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் மாணவர்களுக்கு படிப்பில் கவனம் அதிகரிக்கும். ஞாயிறு கிழமைகளில் விநாயகப்பெருமானுக்கு மாலை அணிவித்து வணங்கவும்.
துலாம்
சூரியன் ஆறாமிடத்தில் இருக்கிறார் அரசாங்க விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்கவும். கண் நோய்களை கவனமாக கையாளுங்கள். சந்திரன் சஞ்சாரம் சாதகமாக உள்ளதால் மனதில் உற்சாகம் பிறக்கும். செவ்வாய் எட்டாமிடத்தில் இருக்கிறார் வண்டி வாகனங்களில் கவனமாக இருக்கவும். நெருப்பு, மின்சார விசயங்களில் எச்சரிக்கை தேவை.
புதன் ஐந்தாம் வீட்டில் இருப்பதால் பங்கு வர்த்த முதலீடுகளில் லாபம் அதிகரிக்கும் வீட்டில் லட்சுமி கடாட்சம் உண்டாகும். மாணவர்கள் கல்வித்தரம் உயரும். படித்து வேலை செய்யும் இளம் வயதினருக்கு திருமண யோகமும் குழந்தைகளுக்காக ஏங்கி தவித்தவர்களுக்கு புத்திர பாக்கியம் ஏற்படும்.
சுக்கிரன் உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் இருப்பதால் உல்லாசப் பயணம் செல்வீர்கள். சனி உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் குரு, கேது உடன் இணைந்து இருப்பதால் மனதில் சஞ்சலம் உண்டாகும். வேலையில் இடமாற்றம் உண்டாகும். ராகு உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் அப்பாவுக்கு உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். கேது உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் புத்தியில் கலக்கம் உண்டாகும். மாணவர்கள் உயர்கல்விகாக எழுதும் தேர்வுகளில் வெற்றி கிடைக்கும்.
அரசாங்க துறையிலும் வேலை வாய்ப்பில் பதவி உயர்வும் சிறப்பாக இருக்கும். திருமண யோகமும் பூமி யோகம் கூடி வரும். புதன்கிழமைகளில் லட்சுமி ஹயக்ரீவரை வணங்க நன்மைகள் நடைபெறும்.
விருச்சிகம்
சூரியன் உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் வியாபாரம் விருத்தியாகும். மாணவர்களுக்கு தேர்வில் மதிப்பெண் அதிகரிக்கும், நுண்கலைகளில் ஆர்வம் அதிகரிக்கும்.செவ்வாய் ஆறாமிடத்தில் இருக்கிறார் உடன் பிறப்புகளுடன் சச்சரவு உண்டாகும், கூர்மையான பொருட்களால் காயம் ஏற்படும். புதன் சுக்கிரன் உடன் இணைந்து நான்காம் வீட்டில் இருப்பதால் தாய்மாமன் உதவி கிடைக்கும். வாகன யோகம் உண்டாகும்.
குருபகவான் இரண்டாம் வீட்டில் சஞ்சரிப்பதால் பணவரவு அதிகரிக்கும். செல்வ வளம் பெருகும். சனி இரண்டாமிடத்தில் இருக்கிறார் குடும்பத்தில் குழப்பம் உண்டாகும், கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்படும் விட்டுக்கொடுத்து செல்லவும்.
ராகு உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் யாரிடமும் விதண்டா வாதம் செய்யாதீர்கள். கேது உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் பண வரவு அதிகரிக்கும்.
தனுசு
சூரியன் உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் அரசாங்க ஒதுக்கீட்டில் வீடு நிலம் கிடைக்கும். அப்பாவினால் நன்மை உண்டாகும்.
மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். வேலைவாய்ப்பில் பதவி உயர்வு தேடி வரும் திருமணப்பேச்சுவார்த்தையில் வெற்றி கிடைக்கும். செவ்வாய் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் குழந்தைகளால் சந்தோஷம் உண்டாகும். 8ஆம் தேதிக்கு மேல் சிறு உல்லாசப் பயணம் செல்வீர்கள்.
புதன் நான்காமிடத்தில் இருக்கிறார் படிப்பில் முன்னேற்றம் உண்டாகும், தாய் மாமனின் உதவி கிடைக்கும். சுக்கிரன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் புதிதாக பொன்னகைகளை வாங்குவீர்கள் 7ஆம் தேதிக்குப் பின்னர் இடம் மாறும் சூழல் உருவாகும்.
சனி உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் உடல் உழைப்பு அதிகரிக்கும், உடலில் அசதி உண்டாகும். ராகு உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் அக்கம்பக்கத்தினரால் நன்மை உண்டாகும். கேது உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் உடலில் அசதி அதிகரிக்கும்.
மகரம்
சூரியன் உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் அடிக்கடி வெளியூர் செல்லும் நிலை ஏற்படும், அலுவலகத்திலிருந்து நல்ல தகவல் வரும். செவ்வாய் ஐந்தாம் வீட்டில் இருப்பதால் குழந்தைகளால் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிதாக வண்டி வாகனம் வாங்குவீர்கள், தொழிற்சாலைக்காக இயந்திரங்கள் வாங்குவீர்கள்.
புதன் இரண்டாம் வீட்டில் சுக்கிரன் இருப்பதால் பேச்சில் இனிமை அதிகரிக்கும் தகவல் தொடர்பு சிறப்படையும், வியாபார வாடிக்கையாளர்களுடன் நல்லுறவு நீடிக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் திருமண யோகம் கூடி வரும். வீட்டில் லட்சுமி கடாட்ச யோகம் வந்து விட்டது. எதிலும் தைரியமாக செயல்படுவீர்கள்.
முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சுக்கிரன் இரண்டாம் வீட்டிற்கு செல்வதால் பொன் நகைகளை வாங்குவீர்கள். உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் தொழிலுக்காக முதலீடுகள் அதிகரிக்கும், வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும்.
ராகு உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் மனதில் தைரியம் பிறக்கும். கேது உங்கள் ஜென்ம ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் வங்கி முதலீடுகள் அதிகரிக்கும். பெண்களுக்கு இந்த வாரம் மகிழ்ச்சிகரமான வாரம் துர்க்கை அம்மனை வழிபட நன்மைகள் அதிகம் நடைபெறும்.
கும்பம்
சூரியன் உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் வங்கி சேமிப்பு அதிகரிக்கும். அரசாங்கத்திடமிருந்து வர வேண்டிய பணம் கைக்கு கிடைத்து விடும். செவ்வாய் நான்காமிடத்தில் இருப்பதால் வீடு நிலம் வகையில் முதலீடு செய்வீர்கள் புதிதாக வண்டி வாகனம் வாங்குவீர்கள். புதிய சொத்துக்களை வாங்கும் போது தாய் மனைவி பெயருக்கு பத்திரம் சேர்த்து எழுத வேண்டும்.
புதன் உங்கள் ராசியில் சுக்கிரன் உடன் இணைந்து அமர்ந்திருப்பதால் முக வசீகரம் அதிகரிக்கும். பொன்னகைகளின் சேர்க்கை அதிகரிக்கும் உங்கள் பேச்சில் மதிப்பு கூடும். உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் குரு உடன் சேர்ந்து இருக்கிறார் மனதின் ஆசைகள் எல்லாம் நிறைவேறும், சுய தொழிலில் ஏற்றம் ஏற்படும். ராகு உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் பொழுதுபோக்கு விஷயங்களில் கவனம் செலுத்துவீர்கள்.
கேது உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பெண்களின் மதிப்பு மரியாதை சமூகத்தில் கூடும். அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தியை வணங்க நன்மைகள் நடைபெறும்.
மீனம்
சூரியன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் இருப்பதால் பூர்வீக சொத்தில் பங்கு கிடைக்கும். சந்திரன் சஞ்சாரம் இந்த வாரம் சாதகமாக உள்ளதால் மனதில் நிம்மதி அதிகரிக்கும். செவ்வாய் உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருப்பதால் இளைய சகோதரர்களால் நன்மை உண்டாகும், அடிக்கடி வெளியூர் செல்வீர்கள்.
புதன் சுக்கிரன் உடன் 12ஆம் இடத்தில் மறைவு பெற்று அமர்ந்திருப்பதால் செலவுகள் அதிகரிக்கும். குரு பகவான் பத்தாம் இடத்தில் ஆட்சி பெற்று பலமாக பதினோராம் பன்னிரண்டாம் அதிபதியுடன் சனியுடன் சேர்க்கை பெற்று கேதுவுடன் சேர்ந்திருப்பது நன்மை தரும் அமைப்பாகும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.
திருமணபாக்கியம் புத்திர சந்தான பாக்கியம் கிடைக்கும். அலுவலகத்தில் பதவி உயர்வு தேடிவரும் அதன் மூலமாக வருமானம் அதிகரிக்கும். சனி உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் முயற்சிகள் எல்லாம் வெற்றியடையும், காரியங்கள் எல்லாம் சிறப்படையும்.
ராகு உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் வாகனங்களை பராமரிப்பு செய்து சரி செய்து வைத்துக் கொள்வது நல்லது. கேது உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் எல்லா செயல்களும் எளிமையாக நிறைவேறும்.
இந்த வார ராசி பலன்கள் (29-03-2019 முதல் 04-04-2019 வரை) : எந்த ராசிக்கு நன்மை? 1

Back to top button