வலுவிழக்கும் சூரியன்; மீண்டும் உலகில் பனிக்காலம்: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
சூரியன் தனது சக்தியில் 7%ஐ இழக்கும் நிலை ஏற்பட்டிருப்பதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
சூரியன் சாதாரணமாக 11 ஆண்டுகளுக்கு ஒரு முறை வெப்ப நிலையை குறைத்து மீண்டும் அதிகரிக்கிறது.
எனினும் அவ்வாறு 11 ஆண்டுகளுக்கு ஒரு முறை அடைகின்ற வெப்ப நிலை குறைப்பைவிட இந்த முறை 7% அதிக வலுவிழப்பை அடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது சூரியனின் மின்காந்த கட்டமைப்பில் ஏற்படுகின்ற மாற்றத்தின் விளைவால் நிகழ்கிறது.
இதற்கு முன்னர் 17ஆம் நூற்றாண்டில் இவ்வாறான ஒரு நிலை ஏற்பட்டது.
இதன்படி விஞ்ஞானிகளது கணிப்பின்படி எதிர்வரும் 2030 ஆம் ஆண்டளவில் இந்த வலுவிழப்பு ஆரம்பமாகிறது.
அது 2050ஆம் ஆண்டு வரையில் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும் சரியான கால அளவு இன்னும் துல்லியமாக கண்டறியப்படவில்லை.
இந்த காலப்பகுதியில் பூமியில் ஒரு ‘குறுகிய’ பனிக்காலம் மீண்டும் ஏற்படலாம் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.
முக்கியமாக உலகின் மிக அதிகமான இடங்களில் பனிப்பொழிவு ஏற்பட்டு குளிர்காலம் நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.