செய்திகள்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

இலங்கைக்கு அருகே மற்றொரு சூறாவளி உருவாகி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் வங்காள விரிகுடாவின் தென்கிழக்கில் குறைந்த அழுத்ததுடன் தாழமுக்கம்  உருவாக்கும் வாய்ப்பு உள்ளது.

இது அடுத்த 48 மணி நேரத்தில் குறித்த தாழமுக்கம் சூறாவளி புயலாக மாற்றமடைந்து எதிர்வரும் நாடக்களில் இலங்கை மற்றும் தென்னிந்தியாவை  தாக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அடுத்த சில நாட்களில் நாட்டின் காலநிலையில் மாற்றம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, உவா, மத்திய, மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் ஒரு சில இடங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் நாளை பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம், 50மி.மீற்றர் வரை கனமான மழைவீழ்ச்சி சில இடங்களில் பதிவாகலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து மறு அறிவித்தல் வரும் வரை மீனவர்கள் யாரும்  கடலுக்கு செல்ல வேண்டாம் என  வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Back to top button