செய்திகள்

வாகன அனுமதி பத்திரங்கள் தொடர்பான அறிவித்தல்

காலாவதியான வாகன அனுமதிப் பத்திரங்களுக்கு உரிய தண்டப்பணத்தை தபால் அலுவலகங்களில் செலுத்துவதற்கான கால எல்லை இன்றுடன் நிறைவடையவுள்ளது.

தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்னவினால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதன்படி, கொரோனா தொற்று பரவல் காரணமாக வழங்கப்பட்டிருந்த சலுகைக்காலத்தை இன்றுடன் முடிவுறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், காலாவதியான வாகன அனுமதிப் பத்திரங்களுக்கு உரிய தண்டப்பணத்தை, நாளையதினம் முதல், தவறு இழைக்கப்பட்ட நாளில் இருந்து 14 நாட்களுக்குள் மேலதிக கட்டணம் இன்றி செலுத்த முடியும்.

மேலும் இந்த விடயம் தொடர்பில் தவறு இழைக்கப்பட்ட நாளில் இருந்து 28 நாட்களுக்குள் மேலதிக கட்டணத்துடன், செலுத்த முடியும் என தபால் திணைக்களம் அறிவித்துள்ளது.

அத்துடன் 28 நாட்களுக்கு மேற்பட்ட தண்டப் பணக் கொடுப்பனவுகள் தபால் அலுவலகங்களில் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் பொலிஸ் திணைக்களத்தின் வேண்டுகோளின் அடிப்படையில், கொழும்பு நகர போக்குவரத்து பொலிஸ் மற்றும் பொலிஸ் அவசர அழைப்பு பிரிவு ஆகியவற்றினால் விதிக்கப்படும்,

தண்டப் பணக் கொடுப்பனவுகளை மாத்திரம் முன்னைய சலுகைக் காலத்தை பயன்படுத்தி பெப்ரவரி 8 ஆம் திகதி வரை தபால் அலுவலகங்களில் ஏற்றுக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Back to top button