செய்திகள்

ஊரடங்கு உத்தரவு தொடர்பில் சற்று முன்னர் வெளியான விசேட செய்தி….!

வெயாங்கொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிக்கு மறுஅறிவித்தல் வரும் வரை பொலிஸ் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை மினுவாங்கொடை மற்றும் திவுலபிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள கிராம சேவகர் பிரிவுகளுக்கும் மேலதிக அறிவிப்பு வரும் வரையில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் முன்னதாக பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு காலத்தில் கிராம சேவாகர் பிரிவுகளில் உள்ளவர்கள் குடியிருப்புகளில் இருக்க வேண்டும் என்றும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரட்ன ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்ட பகுதிகளுக்குள் நுழைவது, அத்தகைய பகுதிகளை விட்டு வெளியேறுவது மற்றும் பொலிஸ் பிரிவுகளில் பயணம் செய்வது கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது.

1897 எண் 3 இன் தனிமைப்படுத்தல் மற்றும் நோய்களைத் தடுக்கும் கட்டளைச் சட்டத்தின் படி பொலிஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Back to top button