வெளியானது புதிய சுகாதார வழிகாட்டல்
சுகாதார அமைச்சினால் புதிய சுகாதார வழிகாட்டல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, அத்தியாவசிய தேவைக்காக இன்று முதல் வீட்டிலிருந்து ஒருவர் மாத்திரமே வெளியே செல்ல முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இன்று முதல் எதிர்வரும் 31 ஆம் திகதிவரை அனைத்து உடற்பிடிப்பு மற்றும் உடற்பயிற்சி நிலையங்கள், சிறுவர் பூங்காக்கள், உள்ளக விளையாட்டரங்குகள், நீச்சல் தடாகங்கள் என்பன மூடப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இசை நிகழ்ச்சிகள் மற்றும் கடற்கரை களியாட்ட நிகழ்வுகள் என்பனவும் நடத்தப்படக்கூடாது என புதிய சுகாதார வழிகாட்டலில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல், அறநெறி பாடசாலைகள் மற்றும் மேலதிக வகுப்புகள் நடத்துவதனை நிறுத்துமாறும் புதிய சுகாதார வழிகாட்டியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வீடுகளில் எந்தவொரு ஒன்றுகூடல்களையும் நடத்த முடியாது எனவும் சுகாதார வழிகாட்டியில் குறிப்பிட்டுக்காட்டப்பட்டுள்ளது.
இதேநேரம், வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்கள் ஒன்றுகூடுவதும் தடை செய்யப்பட்டுள்ளது.




Source : virakesari.lk