செய்திகள்
இன்றைய நாள் (07.05.2019)
உன் மனம் ஒன்றே உன்னை வீழ்த்தக்கூடிய ஒரே ஆயுதம். அதுதெளிவாக இருக்கும் வரையில் நீ ஒருவராலும் வீழ்த்தப்படுவதில்லை: இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (07.05.2019 )…!
07.05.2019 ஸ்ரீ விகாரி வருடம் சித்திரை மாதம் 24 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை.
சுக்கில பட்ச திரிதியை திதி பின்னிரவு 3.02 வரை. அதன்மேல் சதுர்த்தி திதி. ரோகிணி நட்சத்திரம் மாலை 5.10 வரை. பின்னர் மிருக சீரிஷம் நட்சத்திரம். சிரார்த்த திதி வளர்பிறை திரிதியை. அமிர்தசித்தயோகம். மேல்நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள் அனுஷம், கேட்டை. சுபநேரங்கள்: பகல் 11.15–12.00. மாலை 4.30–5.30 ராகுகாலம் 3.00–4.30. எமகண்டம் 9.00–10.30. குளிகைகாலம் 12.00–1.30 வாரசூலம் – வடக்கு (பரிகாரம்– பால்).
மேடம் : அன்பு, இரக்கம்
இடபம் : நலம், ஆரோக்கியம்
மிதுனம் : ஊக்கம், உயர்வு
கடகம் : புகழ், பெருமை
சிம்மம் : லாபம், லஷ்மீகரம்
கன்னி : புகழ், செல்வாக்கு
துலாம் : சலனம், சஞ்சலம்
விருச்சிகம் : மகிழ்ச்சி, சந்தோஷம்
தனுசு : கவனம், எச்சரிக்கை
மகரம் : மறதி, விரயம்
கும்பம் : இன்பம், மகிழ்ச்சி
மீனம் : அன்பு, இரக்கம்
அட்சய திரிதியை தான தருமங்கள் செய்யவும். புண்ணியங்கள் பெருகும். கிருதயுகாதி, பலராம ஜெயந்தி. ரோகிணி நட்சத்திர தினமான இன்று கோவர்தன கிரிதாரியான, துவாரகா புரி வாசனான கண்ணனை வழிபட கவலைகள் விலகும். மங்கையர்கரசியார் குருபூஜை. சோழநாட்டு பழையாரையில் அவதரித்தவர். பாண்டிய நாட்டு மன்னன் கூன்பாண்டியனை மணந்து திருஞான சம்பந்தர் திருநீற்றருளால் கூன்பாண்டியனை நின்ற சீர் நெடுமாறனாக்கிய சிறப்பினர். பாண்டிய நாட்டில் சமண சமய இருள் நீக்கிச் சைவ சமய ஒளி பரப்பியவர். திருஞானசம்பந்தர் திருவருள் பெற்றவர். (“அதிர்ஷ்ட தேவி அருள் செய்தால், அறிவிலிகளைத் தவிர வேறு யாரும் அவளுடன் கொஞ்சிக் குலாவ மாட்டார்கள்” – ட்ரைடன்) கேது, சுக்கிரன் கிரகங்களின் ஆதிக்க நாள் இன்று.
அதிர்ஷ்ட எண்கள்: 2–6
பொருந்தா எண்: 8
அதிர்ஷ்ட வர்ணங்கள்: வெளிர் மஞ் சள், அடர் பச்சை
இராமரத்தினம் ஜோதி
(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)