செய்திகள்
பிரித்தானியாவில் இறுக்கமடையும் சட்டம்!! மீறினால் 1,000 பவுண்டுகள்!
கார் ஜன்னல்களில் ஸ்டிக்கர் ஓட்டும் ஓட்டுனர்களுக்கும் மற்றும் வாசனைக்காக வாசனை அட்டை தொங்கவிடப்பட்டிருக்கும் கார்களின் சாரதிகளுக்கும் அபராதம் விதிக்கும் வகையில் சட்டம் வலுவடைந்துள்ளதாக இங்கிலாந்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிரித்தானியாவில் அலங்காரத்திற்காக வாகன ஓட்டிகள் பலரும் தங்களுடைய கார் கண்ணாடிகளில் ஸ்டிக்கர்களை ஒட்டியுள்ளதோடு வாசனை அட்டைகளையும் தொங்கவிட்டுள்ளனர்.
இது சட்டவிரோதமாக இல்லை என்றாலும் கூட, அவற்றை ஓட்டக்கூடாது என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அதுபோன்ற ஸ்டிக்கர்கள் சாலை பார்வையிலிருந்து உங்களை தடுக்க கூடியதாக இருப்பதோடு, விபத்து ஏற்படுவதற்கு கூட வழிவகை செய்ய வாய்ப்புள்ளது.
எதேச்சையாக நடந்த விபத்தில் உங்கள் மீது தவறு இல்லை என்றாலும் கூட, உங்கள் காரில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தால், அந்த இடத்திலேயே 100 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்படும். மேலும், உங்களுடைய வாகன உரிமத்திலிருந்து மூன்று பெனால்டி புள்ளிகள் நீக்கப்படும்.
ஒருவேளை இந்த விடயத்தை நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றால், உங்களுக்கு 1,000 பவுண்டுகள் அபராதமாக விதிக்கப்படும்.
விபத்தின் போது உங்களுடைய காரில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தாலோ இல்லை வாசனை அட்டைகளையும் தொங்கவிடப்பட்டிருந்தாலோ. சேதத்திற்கான எந்த காப்பீடும் செய்ய இயலாது என பிரித்தானிய போக்குவரத்து விதி கூறுகிறது.
மேலும் இந்த விதியை பின்பற்றி விபத்துக்களை தவிர்க்க முயற்சிக்குமாறும் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பெரும்பாலும் வெளிநாட்டவர்களுடைய கார்களிலேயே இவ்வாறான ஆடம்பர ஸ்டிக்கர்களும் வாசனை அட்டைகளும் தொங்கவிடப்பட்டிருக்கின்றன என்பதும் சுட்டிக்கட்டத்தக்கது.