செய்திகள்

1000 மில்லியன் அமெரிக்கா டொலர்களை சீனாவிடம் பெற அரசாங்கம் தீர்மானம் : பந்துல

அரசாங்கத்தால் செலுத்தப்படவுள்ள கடன்கள் மற்றும் புதிய வேலைத்திட்டங்களுக்காக சீனா அபிவிருத்தி வங்கியிடமிருந்து 1000 மில்லியன் அமெரிக்கா டொலர்களையும் , 2000 மில்லியன் யென்களையும் பெற்றுக் கொள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அமைச்சரவை அனுமதியைப் பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர் பந்துல குணவர்தன, இந்த விடயம் தொடர்பில் சீனாவுடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

பட்டதாரி நியமணங்கள் தொடர்பில் தேர்தல் ஆணையாளரிடம் கலந்துரையாடப்பட்டுள்ள போதிலும் , தேர்தல் ஆணையகம் தேர்தல் முடிவுறும் வரையில் அதனை செயற்படுத்த முடியாது என்று அறிவுறுத்தியுள்ளது.

நியமண கடிதங்கள் கிடைக்கப் பெற்ற பட்டதாரிகளுக்கு தேர்தல் முடிந்து ஐந்து நாட்களின் பின்னர் பயிற்சிகள் ஆரம்பிக்கப்படும்.

அவ்வாறு கடிதங்கள்  கிடைக்கப் பெறாதவர்கள் இருப்பார்களாயின் அவர்களுக்கு  உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் இணைத்தில் பிரவேசித்து பட்டதாரி நியமணங்கள் தொடர்பான பகுதியை பார்ப்பதனூடாக , தமது பெயரும் இருக்கின்றதா என்பது தொடர்பில் அறிந்துக் கொள்ளமுடியும்.

அவ்வாறு பெயர் குறிப்பிடப்படாதவர்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு கடிதமொன்றை அனுப்பிவைத்தால் அது தொடர்பில் ஆராய்ந்து பார்க்கப்படும்.

அவ்வாறு நியமண கடிதங்கள் கிடைக்கப் பெற்று 7 நாட்களுக்குள் அவர்கள் பதவிகளை ஏற்காவிட்டால். பதிவி வழங்கப்படமாட்டாது. இதேவேளை, அரசாங்கத்திடம் நிதி இல்லை என்றும் , அரசாங்கத்தினால் செயற்பட முடியாது என்றும் எதிர்தரப்பினர் கருத்து தெரிவித்து வந்தனர்.

இது தொடர்பில் அவதானம் செலுத்திய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ இந்த மூன்று மாதகாலத்திற்கு அரசசெலுவுகளை முன்னெடுப்பதற்காக திறைச்சேறியின் செயலாளருக்கு அனுமதியைப் பெற்றுக் கொடுத்துள்ளார்.

அதற்கமைய அரசாங்கத்தினால் செலுத்த வேண்டியுள்ள கடன்தொகைளை செலுத்த எதிர்பார்த்திருக்கின்றோம்.

இந்நிலையில் புதிய வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வெளிநாட்டு கடன் பெறுவது தொடர்பில் அமைச்சரவை அனுமதியைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

இதன்போது சீனா அபிவிருத்தி வங்கியிலிருந்து 1000 மில்லியன் மொரிக்கா டொலர்களையும் , 2000 மில்லியன் யென்கயையும் பெறுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 3 வருட சலுகை அடிப்படையிலேயே இந்த நிதி பெற்றுக் கொள்ளப்படவுள்ளதுடன் , இந்த விவகாரம் தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன.

எதிர்தரப்பினர் எம்மால் சர்வதேசத்தில் கடன் உதவிகளை பெற்றுக் கொள்ள முடியாது என்று தெரிவித்திருந்தனர். தற்போது சீனாவுடன் இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது என அவர் இதன்போது தெரிவித்தார்.

Back to top button