செய்திகள்

ஊரடங்குச் சட்டம் தொடர்பான அரசாங்கத்தின் அறிவிப்பு

நாடளாவிய ரீதியில்  மே 31, ஜூன் 04,05 ஆம் திகதிகளில்   ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளதாவது :

நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் மே 31 ஞாயிற்றுக்கிழமை முழு நாளும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும்.

ஜூன் 01 திங்கள் முதல் ஜுன் 03 புதன் வரை அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு சட்டம் முன்னர் போன்று இரவு 10.00 மணி முதல் அதிகாலை 4.00 மணி வரை மட்டுமே அமுல்படுத்தப்படும்.

ஜூன் 04 வியாழன் மற்றும் ஜுன் 05 வெள்ளி ஆகிய இரு தினங்களும் நாடு முழுவதிலும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும்.

ஜூன் 06 சனி முதல் அனைத்து மாவட்டங்களிலும் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு சட்டம் முன்னர் போன்று இரவு 10.00 மணி முதல் அதிகாலை 4.00 மணி வரை மட்டுமே அமுல்படுத்தப்படும்.

இதேவேளை , கொழும்பு மற்றும் கம்பஹா தவிர்ந்த ஏனைய மாவட்டங்ளுக்கு இடையிலான அனுமதியளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்குச் சட்டம் தொடர்பான அரசாங்கத்தின் அறிவிப்பு 1

Back to top button