செய்திகள்
1400 பயணிகளுடன் நடுக்கடலில் சிக்கித்தவிக்கும் கப்பல்…. காயங்களுடன் அலறும் பயணிகள்! மீட்பு பணியில் ஹெலிகாப்டர்கள்
நோர்வே நாட்டில் கடலில் சென்றுகொண்டிருக்கும் போது திடீரென எஞ்சின் பழுது ஏற்பட்டதால், நடுக்கடலில் அசுர வேகத்தில் தாக்கும் அலைகளுக்கு நடுவில் பயணிகள் சிக்கித்தவித்து வருகின்றனர்.
எம்.வி. வைகிங் ஸ்கை வகை கப்பலானது நார்வே நாட்டின் ஹஸ்டட்ஸ்விகா பே பகுதியில் உள்ள கடலில் 400 பிரித்தானியர்கள் உட்பட 1400 பயணிகளுடன் புறப்பட்டுள்ளது.
கடலில் சென்றுகொண்டிருக்கும் போது திடீரென ஏற்பட்ட இயந்திர கோளாறால் பழுதாகி நின்றுவிட்டது. அசுர வேகத்தில் எழும்பும் அலைகள் தொடர்ந்து கப்பலை தாக்கி வருவதால் உள்ளிருக்கும், கண்ணாடி, மேல்தளம் மற்றும் ஜன்னல்கள் உடைந்து நொறுங்கி வருகின்றன.
சிறிது சிறிதாக கப்பலினுள் தண்ணீர் புகுந்து வருவதால் பயணிகள் அனைவரும் அச்சத்தில் கூச்சலிட்டு வருகின்றனர்.
இதனை அறிந்த நோர்வே கப்பற்படை 5 ஹெலிகாப்டர்கள் மற்றும் கப்பல்களில் உள்ளிருக்கும் பயணிகளை மீட்டு வருகின்றனர்.
நேற்று மாலை 6 மணிவரை (உள்ளுர் நேரப்படி) 100 பேர் மீட்கப்பட்டு அருகாமையில் உள்ள கிராமத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மீட்பு பணிகளானது இரவு பகலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதில் 90 வயதான நபர் மற்றும் அவரது 70 வயதான மனைவி கடுமையான காயமடைதிருப்பதாக உள்ளுர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.